new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். திருப்பாடல் 89:1

 

திருத்தூதர் மத்தேயு நற்செய்தியில் இறைமகன் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு அவர்களின் குணங்களைப்பற்றி கருத்தில் கொள்வோம். யோசேப்பு நேர்மையாளர் அவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார். அவ்வாறு அவர் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றி இறைவனுடைய திட்டத்தை அவருக்கு வெளிப்படுத்துகின்றார். அஞ்ச வேண்டாம் ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் என்பதை அறிவித்ததும் அவர் தாழ்மையுடன் இறைவனின் திருவுளத்தை ஏற்றுக் கொள்கின்றார். நேர்மையாளர்களுக்கு இறைவன் கொடுக்கும் வாக்குறுதிதான் “ அஞ்சாதே! உம்மை கைநெகிழ்வதும் இல்லை, உம்மை விட்டு விலகுவதும் இல்லை. உலகு முடிவுமட்டும் நான் உன்னோடு இருப்பேன் என்று. நேர்மையாளர். இறைவனுக்கு அஞ்சி நடப்போர் ஒருபோதும் தீமை செய்வதில்லை. யாரையும் இகழ்சிக்கு உள்ளாக்க மாட்டார்கள். நம்மைகள் செய்வதற்கு மட்டும் அவர்களுடைய எண்ணங்கள் தோன்றும். நானும் நீங்களும் தூய யோசேப்பைப் போல் நேர்மையிலும் வாய்மையிலும் வளர்ந்து இறைவனின் திருவுளம் யாது என்பதை நன்கு உணர்ந்து செயல்படவும், யாரையும் எந்தச் சூழ்நிலையிலும் இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் இருக்க வரம் வேண்டுவோம். லில்லி மலர் எவ்வாறு தூய்மை நிறைந்து உள்ளதோ அதேபோல் நாமும் நமது வாழ்க்கையில் தூய்மையுடன் வாழ தூய யோசேப்புடன் மன்றாடுவோம். தவக்காலத்தில் நம்மை இகழ்ச்சிக்கு தள்ளியவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்.

சிந்தனை

நமது வாழ்க்கையில் யாரையும் இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் இருக்க கற்றக் கொள்வோம்.

நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவாிடம் அடைக்கலம் புகுவர்; நேரிய உள்த்தோர் அவரைப் போற்றிடுவர். திருப்பாடல் 64:10

இதோ! நீ விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். திருப்பாடல் 51:6-7

இன்றைய யோவான் நற்செய்தியில் வழிபாட்டுத் திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களில் சிலர் இறைமகன் இயேசுவைக் காண விரும்புகின்றார்கள். திருத்தூதர்களான அந்திரேயாவும் பிலிப்பும் இறைமகன் இயேசுவிடம் கூறும்பொழுது அவர் கூறுகின்ற பதிலைக் கவணத்தில் எடுப்போம். “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது “என்று. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன் என்கின்றார். நாம் அனைவருக்காக பாவம் எதுவும் இல்லாமல் கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்து விளைச்சல் கொடுப்பது போல் இறைமகன் தான் அன்பு செய்தவர்களின் துரோகம், நம்பியவரின் பணம் ஆசையால் வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக் கொடுத்த கொடுமை, துன்பங்கள், அவலங்கள், பொய் குற்றச்சாற்றுகள், வாழ்க்கையில் எண்ண முடியாத கொடூர மரணம்? சிலுவையில் அறையும் அறையும் என்று மக்களின் குரலொலிகள், ஆம் அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியாக இறைவனின் திருவுளத்தை கற்றுக் கொண்டார். அதனால் அவர் மனமுவந்து துன்பத்தை ஏற்றுக் கொள்ள முன்னோக்கிப் பயணிக்கின்றார். இன்று இறைவனுடைய மாட்சியைக் நாம் காண விரும்பினால் அவருடன் இரவும் பகலும் இறைஉறவில் அவருடைய வார்த்தையால் உறவாட வேண்டும். பாவம் என்னும் தீவினைகளை நம்மிலிருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். இறைமகன் இயேசு அன்பு செய்த உறவினான லாசர் இறந்தபோது அவருடைய சகோதரி மார்த்தாவிடம் கூறுகின்றார் ‘நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய் என்று கூறி பாவம் என்னும் கல்லை அகற்றிவிடும் படி கூறி, உள்ளம் குமுறியவராய் இறைவனிடம் தன்னுடைய வேண்டுதலை எழுப்புகின்றார். அவருடைய வேண்டுதலைக் கேட்டு தந்தையாம் இறைவன் லாசரை உயிரோடு கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வருகின்றார். இறைவனுடைய மாட்சியை அனுபவிக்க எதிராக நம்முள் இருக்கும் பாவம் என்னும் கல்லை நம்மிலிருந்து அகற்றுவோம் என்றால் அவருடைய மாட்சியை நம்மால் உணரமுடியும். இறைமகனாக இயேசுவே எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களோடு பயணித்தருளும். திக்கற்றவர்களாக விட்டுவிடாதேயும் ஆவியானவரின் துணையுடன் பயணித்தை உம்மோடு தொடர வேண்டுகின்றோம்.

சிந்தனை

நம்மை அறியாமலே நாம் செய்துவருகின்ற பாவங்களுக்காக இன்று இறைவனிடம் மன்னிப்புக் கேட்போம்.

ஆண்டவரது மலையில் ஏறத் துகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். திருப்பாடல் 24:3-4

நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறுக் கிழமையில் பயணிக்கின்றோம். இந்த ஆண்டு தவக்காலத்தின் இறைவாசகங்களின் வழியாக பலமுறை இறைவன் நம்மோடு வாசம் செய்வதற்கு விருப்பமாய் இருக்கின்றார் என்றும், அவர் நமக்கு கொடுத்துள்ள கட்டளைகளையும், நெறிகளையும் பின்பற்றி தூய்மையுடன் வாழவேண்டும் என்றுதானே விரும்புகின்றார் தந்தையாம்நமது இறைவன். அவர் செய்த புதிய உடன்படிக்கையை இன்று நமது கவணத்திற்கு கொண்டுவருவோம். “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்“ , பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்ளவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன், அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன் என்று நம்பிக்கை நிறைந்த அழகான வாக்கை புதிய இஸ்ரயேல் மக்களாகிய நமக்குத் தருகின்றார். இறைவன் இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இதே கருத்தைத்தான் கூறகின்றார். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்தவேன் என்று வாக்கு தருகின்றார். இறைவனின் அருள் பிரசன்னத்தை உணரவேண்டும் என்றால் முதலில் நமக்கு அகத்தூய்மை மிகவும் அவசியம்.

இன்றைய பதிலுரைப் பாடல் 51 :10வது இறைவசனத்தில் தாவீது அரசர் தனது குற்றத்தை உணர்ந்து மனம் மாற்றம் பெற்று இவ்வாறு செபிக்கின்றார்,, “ கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும் “என்று. தூய்மையான உள்ளத்தில் இறைவன் வாழ்வதற்கு விரும்புகின்றார். நம்மைப் படைத்தவரும் மீட்பவருமான இறைவன் நம் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன் என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன் என்று தந்தையின் பாசத்தையும் நேசத்தையும் இதன் வழியாக அறிவுறுத்துகின்றார். இறைவன் நம்மோடு நல்லுறவு உடன்படிக்கை செய்து கொள்வேன் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக அருள் பொழிந்தது “ என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர் என்கின்றார். (எசேக்கியேல் 37:27-28). மேலும் (திருவெளிப்பாடு 21:3) இறைவசனங்களும் கூறுவது “ பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். இறைவன் நம் அனைவரின் மேல் கொண்டுள்ள அக்கறையும் நேசமும் அவருடைய உயிருள்ள வார்த்தையால் நன்றாக உணரமுடிகின்றது.

இறைமகன் இயேசு வாக்குவாக நம்மிடையே குடி கொண்டார். அவரிடம் வாழ்வு இருந்தது. அந்த வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. ஒளியான இறைவன் நம்மில் குடிகொள்ள வேண்டுமென்றால் நம்மில் இருக்கும் அனைத்துச் தீச்செயல்களை அகற்றி விட வேண்டும். நமது உள்ளத்தில் படிந்து கிடக்கும் பாவங்களை வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும். நமது இறைவன் எளிதில் சினம் கொள்ளாதவர். ஆகையால் அவருடைய வல்லமை நம்மில் நிறையட்டும். மனிதனாகப் பிறந்த அனைவரும் பேறு பெற்றவர்கள். அவருடைய தூயகத்திலிருந்து நமக்கு உதவி அனுப்புவார். நமது உள்ளத்ததில் வாழ விரும்பும் இறைவனை உளமார வரவேற்போம். தவக்காலத்தில் நாம் போடும் போலி வேசங்களைக் களைவோம். இனிமேல் வெள்ளை அடிக்கப் பட்ட கல்லறைகளாய் வாழ வேண்டாம். கல்லறையிலிருந்து உயிர்பெற்ற இயேசுவின் சுடராய் விளங்குவோம். வாழ்வு தரும் வாழ்வை வாழ்◌ாவம். தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். தந்தையும் தாயுமான நமது அன்பு இறைவனை முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் நமது ஆன்மா என்னும் சிறிய குகையில் உண்மையோடு வழிபடுவோம். இறைவன் நம் நடுவில் தொடர்ந்து வாசம் செய்வதற்கு விழிப்போடு இருப்போம். இறைவன் நம்மோடு என்றும் வசிக்கின்றார். இனிவரும் அருள் நிறைந்த நாட்களை புனிதமாக செவழிக்க ஆவியானவரின் வழிநடத்தலை கேட்போம். இறைமகன் இயேசு தந்தையின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவருடைய மகிமைக்காக செய்ததுபோல் நாம் அனைவரும் முயற்சிப்போம். நம் ஒவ்வொரு செயல்களும் இறைவனை மாட்சியையும் மகிமையையும் எடுத்துரைக்கட்டும்.

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. திருபாடல்கள் 51:17

பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலை நிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன். திருப்பாடல் 7:9-11

இன்றய முதல்வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் கூறுகின்றார் “ படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுவர், உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர் என்று கூறுகின்றார். இறைவாக்கினர் எரேமியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதை அறிந்து இறைவனிடம் மன்றாடுகின்றார். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிப்போல் இருந்தேன். அவர்கள் எனக்கு எதிராய் இருந்தார்கள் என்கின்றார். யூதர்களின் கூட்டத்தில் இறைமகன் இயேசுவைப் பிடித்து கொலை செய்ய சதி செய்கின்றார்கள். இன்று உலக நாடுகளில் இறைவாக்கினர் எரேமியாவைப் போலும், இறைமகன் இயேசுவைப் போலும் எத்தனையோ மனித உள்ளங்களை வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் செம்மறியாய் கொன்று குவிக்கின்றனர். இன்று நீதி இல்லை, நேர்மை இல்லை, பணத்தால் எதையும் செய்யலாம். பதவியின் பெயரில் அதிகராத்தை தவறு வழிகளில் பயன்படுத்துவதை நம் கண்முன் கண்டும் அமைதி காக்கின்றோம். குரல் எழுப்பினாலும் கடுமையாக தண்டிக்கப்படகின்றோம். அநீதி அநீதி?????. எத்தனை பேர்களின் கண்ணீர்த் துளிகள் இறைவனின் சமுகத்தில் நிறைந்து ஆறாய் ஒடிக் காணும் அல்லவா? ஒருநாள் நீங்களும் நானும் இறைவன் முன் நிற்க வேண்டும். மண்ணால் பிறந்த நாம் அனைவரும் மண்ணுக்குத்தானே போக வேண்டும். யார் மேலும் அநியாயமாய் குற்றம் சுமத்தாமல் வாழப் பழகிக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரின் அனைத்துச் செயல்களையும் எண்ணங்களையும் அறிபவர். யார் மேலும் சதித் திட்டம் தீட்ட நம்மைப் படைக்கவில்லை. நேர்மையுடன் வாழ்வதற்கு நம்மை அழைத்துள்ளார். எனவே யாரையும் தீர்ப்பிடாமல் இருக்க முயற்சி செய்வோம். யார் நம்மை தரக்குறைவாக தீர்ப்பிட்டு சதிசெய்தால் கவலை வேண்டாம் ஏனென்றால் உன்னோடு நானிருப்பேன் என்றவர் நமக்குத் துணையிருக்கின்றார்.

சிந்தனை

பிறர் நமக்கு சதிதிட்டம் தீட்டியதை அறிந்தால் இறைமகன் இயேசு பிலாத்தின் முன் அமைதி காத்தது போல் நாமும் அமைதி காப்போம் ஏனென்றால் கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன் என்பதை ஆழமாக நம்புவோம்.

ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்; ஆண்டவரே என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.திருப்பாடல் 7:8

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு