new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

1.தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை. லூக்கா 23:34

இறைவா எனக்கு மன்னிக்கும் உள்ளத்தை தந்தருளும்.

2. ஏலி லெமா சபக்தானி? அதாவது, என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? மத்தேயு : 27:45

இறைவா என்னை ஒருபோதும் கைவிடாதேயும்.

3. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். லூக்கா 24:43

இறைவா பிறருக்காக செபிக்க எனக்கு கற்றுத் தாரும்.

4. தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன். லூக்கா 24:46

இறைவா உமது திருவுளத்தின்படி நடக்க உதவியருளும்.

5. இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன் “என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்“ என்றார். யோவான் 19: 26-27

இறைவா பிறருக்கு உதவி செய்ய நல்ல இதயம் தந்தருளும்.

6. தாகமாய் இருக்கிறது. யோவான் 19 :28

இறைவா ஆன்ம வாழ்விற்காக தாகமாய் இருப்போருக்கு உதவ நல் உள்ளங்களைத் தந்தருளும்.

எல்லாம் நிறைவேறிற்று. யோவான் 19:30

இறைவா இன்று உம்மிடம் அழைக்கப் பட்டவர்ககள், யாரும் நினையாத ஆன்மாக்களையும் உமது விண்ணக பேரின்ப வீட்டில் உம்மோடு ஒன்று இணைத்தருளும்.

இன்று புனித வெள்ளி நாளைப்பற்றி நமது இதயத்தில் தியானிக்கும்போது இறைமகன் இயேசுவின் கொடூர சிலுவை மரணம் நம் கண்முன் நிற்கின்றது. இறைவாக்கினர் எசாயா நூல் அதிகாரம் 53, 5வது இறைவசனம் கூறுகிறது “ அவர் நம் குற்றங்களுக்காகத் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்“ என்று. நம் ஒவ்வொருவரின் பாவங்களுக்காக சிலுவையில் மரணத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு மூன்று மணி நேரம் அனைத்து வேதனைகளையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு நமக்கு மீட்பு அளிப்பதற்காக சிலுவைியல் இறந்தார். அவர் பாடுகளின் போது சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் நமக்காக மட்டும் என்பதை உணரவேண்டும். நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தை ஒருபோதும் இறைவன் அவமதிப்பதில்லை. இறைமகன் இயேசுவே உமத பரிசுத்த திரு இரத்ததால் எங்களையும், உலகம் முழுவதையும் பரிசுத்தமாக்கும். தீயசக்திகளின் பிடியிலிருந்து எங்களையும் உலகையும் பாதுகாத்தருளும். எங்கள் உள்ளங்களில் கறைபடிந்திருக்கும் அனைத்து பாவங்களையும் மன்னித்தருளும். இறைமகன் இயேசுவே நீர் பொழிந்த ஏழு பொன் பொழிகளை தியானித்து அதன் அர்த்தத்தை வாழ்வாக்க துணைபுரியும். இறைவனுக்கும் அயலானுக்கும் எதிராக செய்யும் பாவங்களுக்காக மனம் குமுறி மன்னிப்பு கேட்டு இறைவனுடன் புதிய மனிதனாக நட்புறவைத் தொடர்வோம். இறைவன் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்

இன்று ஆண்டவருடைய திருப்பாடுகள் குருத்து ஞாயிறு. புனிதவாரத்தில் இறைமகன் இயேசுவின் துன்பங்கள், பாடுகள், மரணத்தை தினிக்கப்போகின்றோம். இறைமகன் இயேசு தனது இறையாட்சிப் பணியில் ஏழையர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார், பாவத்தின் பிடியில் சிறைபட்டோருக்கு விடுதலை அளித்தார், பார்வை இழந்தோருக்கு பார்வைபெறச் செய்தார், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு கொடுத்தார். ஆகையால் மக்கள் அனைவரும் அவரை இஸ்ரயேலின் அரசர் அவர்கள் அனைவருக்கும் விடுதலை அளிக்கப் போகின்றார் என்று நம்பி அவருக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! என்று வாழ்த்திப் புகழ்கின்றார்கள். அரசருக்கெல்லாம் அரசராக நேற்றும் இன்றும் என்றும் வாழ்பவர் யாரும் அமராத கழுதைக் குட்டியின் மேல் அமர்ந்து எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைகின்றார். ஆனால் அந்த புகழ் நிரத்தரமான ஒன்று அல்ல, யூதர்களின் அரசராக புகழ்ந்த மக்கள் அவரைச் சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும், , ஒழிக ஒழிக இவன் சாக வேண்டும் என்று கத்துகின்றார்கள். தனது பணிவாழ்வில் அனைத்திலும் பங்கு பெற்று அவரைப் பின்பற்றிய அன்பு சீடர்களின் ஆணையிட்டு மறுதலிப்பு, முப்பது வெள்ளிக் காசுக்காக காட்டி கொடுத்தது, குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்து அவரைப் பிடித்த போதும், தலைமைக் குருக்களுக்கும், மூப்பர்களுக்கும், மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் பொய்குற்றம் சுமத்திய போதும், இவன் சாக வேண்டியவன் என்று என்று கூறி அவரை முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்திய போதும், அவரைக் கன்னத்தில் அரைந்த போதும், அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்த போதும், அவருக்கு எதிராக குற்றம் சுமத்திய போதும், பரபா என்ன பேர்போன கைதியை தன்னிடம் ஒப்பிட்ட போதும், பிலாத்து மெசியா என்னும் இயேசுவை என்று கேட்ட போது அனைவரும் சிலுவையில் அறையும், இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் என்று கூறிய போதும், ஆளுநனின் படைவீரர்கள் கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அணிவித்து, முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து,ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, யூதரின் அரசரே வாழ்க என்று தலையில் அடித்து, அவரது முகத்தில் துப்பி ஏளனம் செய்த போதும், கள்வர்களின் ஒருவன் பழித்துரைத்த போதும், களப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்க கொடுத்த போதும், தன்னுடைய ஆடையை குழுக்கல் முறையில் பங்கிட்ட போதும், சிலுவையில் மாசுபடாத கைகளையும் கால்களையும் ஆணையால் அறைந்தபோதும், விலாவை ஈட்டியால் குத்திய போதும், அவர் அமைதிகாத்தார். அவர் யாரையும் தீர்ப்பிடவில்லை, தந்தையாம் இறைவன் தன்னிடம் ஒப்படைத்த பணியைச் செய்வதற்காக இறுதிமட்டும் கீழ்படிந்து வெற்றி கொண்ட அரசர்.

இந்த மாபெறும் மறைபொருளைத்தான் இறைவாக்கினர் எசாயா முதல் வாசகத்தில் மிக அழகாக சித்தரித்துள்ளார். இறைவாக்கினர் எரேமியா கூறியது போல் வெட்டுவதற்குக் கொண்டு செல்லும் சாந்தமான செம்மறிப்போல் அவர் எனக்காகவும் உங்களுக்காகவும் அவ்வாறு நடந்து கொண்டார். அனைத்துச் தீச்செயல்களுக்கும் அவர் கிளர்ந்ததெழவில்லை, விலகிச் செல்லவுமில்லை, அடிப்போர்க்கு என் முதுகையும் தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன், நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணைநிற்கின்றார்; நான் அவமானம் அடையேன் என்ற வாக்கு அவருடைய வாழ்வில் நிறைவேறியதை இன்றைய வாசகத்தின் வழியாக உணர்கின்றோம்.

இன்று என்னால் இப்படிப்பட்ட இன்னல்களைத் தாங்க முடியுமா? சிறு அவமானத்தை ஏளனத்தைக் கூட என்னால் தாங்கமுடியாமல் எவ்வளவு கண்ணீர்த் துளிகள், புலம்பல்கள்? உண்மையை எடுத்தரைத்த போதும் நற்செயல்கள் செய்த போது நம்மைபிறர் ஏளனம் செய்து, குற்றம் சுமத்தியால் இறைமகன் இயேசுவைப்போல் அமைதி காத்து, இறைவனின் திருவுளத்தில் பங்குபெறுகின்றோம் என்று மனப்பூர்வமாக கற்றுக் கொள்வோம். நம்முடைய அனுதினம் செபம் தவம் போன்ற தியாகங்கள் நம்மிடையே மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். புனிதவாரத்தில் இறைவனுடைய பாடுகளில் பங்குபெற்று அவருடைய நற்பண்புகளைப் பெறுவோம். என்ன நேர்ந்தாலும் ஆண்டவராகிய என்தலைவர் துணை நிற்கிறார். நான் அவமானம் அடையேன் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் இருக்கட்டும்.

என்னைக் கருப்பையினின்று வெளிக் கொணர்ந்தவர் நீரே; என் தாயிடம் பால்குடிக்கயைிலேயே என்னைப் பாதுகாத்தவரம் நீரே! கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே. திருப்பாடல் 22:9-10

ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர். உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன். இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். திருப்பாடல் 18: 28-30

இன்றைய பதிலுரைத் திருப்பாடல் 18, இறைவசனம் “என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கித் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது “ என்று காண்கின்றோம். தாவீது அரசர் இறைவனை நோக்கி எழுப்பிய செபமாகும். பஸ்கூர் எரேமியா இறைவாக்கினரை பிடித்து அடித்து ஆண்டவரின் இல்லத்தில் சிறையில் அடைத்தான். பஸ்கூருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் நடக்கப் போவதை எடுத்துரைத்த பின்பு எரேமியா இறைவாக்கினர் இறைவன் முன்பாக முறையிடுகின்றார். இறைவன் அவரை ஏமாற்றிவிட்டார் என்று புலம்பினாலும் அவர் இறைவன் மேல் வைத்த அன்பும் நம்பிக்கையும் அசையாமல் இருந்ததால்தான் அவரால் இவ்வாறு செபிக்க முடிந்தது. ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப்போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறிவிழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவெகத்தோடு செயல்படவில்லல் அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே என்கின்றார். இன்று நம்முடைய வாழ்க்கைப் பயணத்திலும் இதேபோல் சம்பவங்களைச் சந்திக்கின்றோம் அல்லவா? இறைவார்த்தையை எடுத்துரைத்தாலும், நற்செயல்கள் புரிந்து நேர்மையுடன் வாழ்ந்தாலும் சுயநலதிற்காக நம்மை குற்றம் சுமத்திக் கொண்டே பயணிக்கும் நண்பர்கள், உறவினர்கள். சொந்த பந்தங்கள் எத்தனை பேர் நம்முடன் வாழ்கின்றார்கள். உள்ளத்தின் உணர்வுகளை அறிவபர் இறைவன் மட்டுமே என்பதை அறிகின்றபோது நமது உள்ளத்தில் திடமான நம்பிக்கை பிறக்கின்றது. எனவெ நமக்கு என்ன நேர்ந்தாலும் பயம் கொள்ளாமல் படைகளின் ஆண்டவர் என்னோடு உள்ளார். அவர் எனக்காக போரிடுவார் என்ற நம்பிக்கையில் வளர்வோம்.

Read more: தவக்கால சிந்தனை 23-03-2018

ஆண்டவரையும் அவவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திமுகத்தை இடையறாது நாடுங்கள்! அவர் செய்த வியத்தகு செயல்களையும் அவர்தம் அருஞ்செயல்களையும் , அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுஙகள். திருப்பாடல் 105:4-5

இன்று விசுவாசத்தின் தந்தையாக அழைக்கப்படும் ஆபிரகாமிடம் இறைவன் உடன்படிக்கை செய்கின்றார். அவருடைய தலைமுறையினருக்கு கடவுளாய் இருப்பேன் என்று வாக்கு தருகின்றார். இறைவன் தலைமுறை தலைமுறையாக அவருடைய வாக்குறுதியை இன்று முதல் நிலைநாட்டி வருகின்றார். அதற்கு நன்றி செலுத்துவோம். இறைவனுடைய வார்த்தைகளைக் கடைபிடித்து அவரைமட்டும் முழு உள்ளத்தோடு வணங்கி வழிபட வேண்டும் நம்மிடம் அவர் எதிர்பார்கின்றார். விவிலியத்தின் நூலை புறட்டிப்பார்த்தால் அவருடைய உறுதிமொழியில் நம்பிக்கை உண்டு அல்லவா? இன்றைய திருத்தூதர் யோவான் நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு கூறும் வாக்குறுதியைக் கவணிப்போம் ‘என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறுகின்றார். அன்று யூதர்கள் இறைமகன் இயேசுவின் வார்த்தையை நம்பவில்லை. நீ பேய்பிடித்தவன், எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா? என்ற கேள்விக்கு ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கின்றேன் என்று பதில் கூறியதும் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள் என்று வாசிக்கின்றோம். கடவுளாகிய இறைமகனுக்கே இந்த நிலை என்றால் இன்று பாவிகளாகிய நமக்கு என்ன நிலை என்று ஆழமாக சிந்திப்போம். இன்று உண்மையை எடுத்துரைப்பவர்களின் நிலையும் இப்படித்தானே? நீ யார்? நீ என்னை விட பெரியவனா? உனக்கு என்னத் தெரியும்? இதுபோன்ற கேள்விகள் ஆயிரம் ஆயிரம் நம்மிடையே நடக்கின்றதுதானே? அன்றாட வாழ்க்கை நடைமுறையில் என்னுடைய அனுகுமுறை எவ்வாறு? யூதர்களைப்போல் நம்பாமல் பிறர்மீது கற்களை எறிய விரும்புகின்றேனா? இறைமகன் இயேசுவைப்போல் உண்மையை மட்டும் பேசுவதற்கு விரும்புகின்றேனா? சிந்தித்து நன்மையை செய்ய முயற்சிப்போம்.

சிந்தனை:

உண்மைக்கு எதிராக நம்மில் இருக்கும் வெளிவேடங்களைக் அகற்றி நேர்மையோடும் உண்மையோடும் என்றும் பதில் கொடுக்க கற்றுக் கொள்வோம்.

நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர் என்றார் அவர். திருப்பாடல் 105:15

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு