new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார்

இன்று பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்களின் வழியாக இறைவன் மனித வாழ்விற்கான வேண்டிய மூன்று  ஆமீகக் கருத்துக்களை நம் முன் வைக்கின்றார். மனம் மாற்றம், அழைப்பு, நற்செய்தி அறிவிப்பு.  இரண்டு நாளைக்கு முன்பு, வெள்ளிக்கிழமை  அன்று வாசிக்க கேட்ட மாற்கு நற்செய்தி கூறுவது  “ இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பபடவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை அழைத்தார் என்று (மாற்கு 3:13-15).  இறைமகனுடன் வாழ்வது சவால் நிறைந்த ஒன்று. நாம் அனைவரும் அறிந்த ஓர் உண்மை. மனம் மாற்றம் பெற்று இறைவனுடன் உள்ளத்தூய்மையுடன் இனணவது, அவர் சொல்லும் வழிகளில் மறுப்பு தெரிவிக்காமல் பயணிப்பது. எளியவர் முதல் செல்வந்தர் வரை இறைவன் பார்வையில் ஒன்று. அவர் பணிக்கென்று அழைக்கும் முறை வித்தியாசமானது. அவருடன் இணைந்து வாழ்ந்தோம் என்றால் அவருடைய வல்லமை நிறைந்த செயல்பாடுகள் நம் வாழ்க்கையிலும் நடக்கும் என்பது நிச்சயம்.  இறைவனுடைய குரலுக்கு செவி கொடுத்தால்  அவர் நம்மை அவருடைய பணிக்காக நம்மை முழுவதும் பயன் படுத்துவார் என்பதை விவிலியம் முழுவதும் கற்பிக்கின்றது.

Read more: இன்று பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு.

ஆண்டவர் அவனோடு இருந்தார்

இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் இறைவன் தனது இறைப் பணிக்கென்று மனித உள்ளங்களை அழைக்கும் சம்பவத்தையும், அழைக்கப்பட்டவர்களின்  வாழ்வில் அவருடைய உடனிருப்பைபற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இறைவன் தனது மீட்புப் பணிக்காக விவிலியத்தில் அழைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இன்றும் அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார். இறைவன் நம் அனைவரையும் அவருடைய உருவிலும் சாயலிலும் படைத்து, ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்துள்ளார். இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் சாமுவேலின் அழைப்பைப் பற்றி கூறுகின்றது. சாமுவேல் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் இருந்த பொழுதுதான் இறைவன் மூன்று முறை அழைத்தும் அவரால் அவருடைய குரலைக் யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. மூன்று முறையும் ஆண்டவரின் குரு ஏலிதான் அழைக்கின்றார் என்று அவரிடம் கேட்கின்றார். ஆண்டவரின் குரு ஏலி இறைவன்தான் அழைக்கின்றார் என்று உணர்ந்து அவரிடம் இவ்வாறு கூறுகின்றார் “உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ  ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கின்றேன் “என்ற பதில் சொல் என்று கூறுகின்றார்.  மீண்டும் ஆண்டவர் இரண்டுமுறை அழைத்த போது அவர் இறைவன்தான் என்று அறிந்து “பேசும் உம் அடியான் கேட்கிறேன் “என்று மறுமொழி கூறுகின்றார். அவசர உலகத்தில் பயணிக்கின்ற நமக்கு இறைவின் குரலைக் கேட்பது இன்று மிகவும் கடினமாக இருக்கலாம். இன்று நமக்கு ஆண்டவரின் குருவாக விளங்கிய ஏலியாவைப் போல் ஆன்மீக குருக்கள்  தேவைப்படுகின்றது. இறைவன் இன்று எத்தனையோ வழிகளில் நம்மை சந்திக்க விரும்புகின்றார். ஆனால் இன்று அவரை முழுமையாக அனுபவிக்க மனிதனாகிய நமக்கு நேரம் இல்லை. வேலைப் பழுவால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டுள்ளோம். இக்காலக் கட்டத்தில் நாம் அனைவரும் அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருக்க வேண்டும். இறைவார்த்தையின்படி வாழ முயற்சி எடுக்க வேண்டும். அப்பொழுதான் இறைவனின் குரலைக் கேட்க முடியும்.  மூன்று முறை அழைத்தும் சிறுவன் சாமுவேல் இறைவனுடைய   குரல்தான் என்று  உணரமுடியவில்லை. அவருக்கு குருவான ஏலியின் உதவி தேவையாய் இருந்தது. இன்று பெற்றோர்கள் விழிப்பாய் இருந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு இறைவனுடைய வழிகளை அவருடைய வார்த்தையின் வழியாக கற்பிக்க வேண்டும். பெற்றோர்கள் இறைஅனுபவம் பெறுவதற்கு குடும்ப செபமும், குடும்பமாக இறைவார்த்தை படித்தல், குடும்பமாக இறைவழிபாட்டில் பங்கு பெறுவது, மேலும் அடுத்திருப்பவர்களுக்கு இறைஅனுபவத்தைபற்றி எடுத்துரைப்பது போன்ற பணிகள் செய்யும் போது இறைவனின் குரலை நம்மால் கேட்கமுடியும் என்பது உண்மை.

Read more: பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

ஆண்டவர் உன்மீது எழுந்தருள்வார்

ஆண்டவரின் திருக்காட்சி திருவிழாவை ஆண்டின் முதல் ஞாயிறு அன்று அன்னையாம் தாய் திருச்சபை கொண்டாட அனைவரையும் அழைக்கின்றது. இறைவன் தலைமுறை தலைமுறையாக ஒளியின் இறைவனாக இருக்கின்றார். இன்றுவரை இருளானவன் ஒளியின்மீது வெற்றி கொள்ளவில்லை. இயற்கையின் வழியாகவும், அவருடைய வார்த்தையின் வழியாகவும் ஔியான இறைவன் அவருடைய வல்லமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றார் என்பதை விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எடுத்துரைக்கின்றது. இன்று இறைவாக்கினர் எசாயா கூறுவதை நமது கவணத்திற்கு கொண்டுவருவோம்.  “எருசலேமே எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இதோ! இருள் பூவுலகை மூடும், காரிருள் மக்களினங்களைக் கவ்வும், ஆண்டவரோ உன்மிது எழுந்தருள்வார். அவரது மாட்சி உன்மீது தோன்றும் “ என்று. இன்று  பிற இனத்தார் என்று அழைக்கப்படும் நம் அனைவரையும் இறைவன் எழுந்து ஒளி வீசும்படி அழைக்கின்றார். ஏனென்றால் ஆண்டவருடைய ஒளி  நம் அனைவரின்மீதும் திருமுழுக்கின் வழியாக முத்திரையிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அருள்சாதனங்களின் வழியாக நம்முடன் செயலாற்றி வருகின்றார். இறைவன் நமக்கு கொடையாக கொடுத்துள்ள அருள் கொடைகளை வளர்க்க நாம் எவ்வாறு உழைக்கின்றோம். இன்று அன்றாட நடைமுறை வாழ்க்கை பயணத்தில் அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்கின்றோம். திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவன் - கிறிஸ்துவள் என்று அழைக்கும் ஒவ்வொருவரும் ஒளியானவருக்கு சாட்சியாக வாழவேண்டும் என்று விரும்புகின்றார். உலக அறிவியல் வளர்கின்ற இக்காலக் கட்டத்தில் காரிருளானவன் மக்களினங்களை கவ்விக் கொண்டு இருளின் பாதையில் பயணிக்கத் தூண்டுவதை கண்ணால் காண்கின்றோம், காதால் கேட்கின்றோம். எப்படி இன்று இருளை அகற்ற முடியும்? இறைவார்த்தையை நன்றாக அறிந்திருந்தால்  நம்மால் இயேசுவைப் போல் அகன்று போ சாத்தானே என்று நம்மால் கூறமுடியும். இப்புத்தாண்டில் இறைவனின் துணையிருப்பை வார்த்தையின் வழியாக அனுபவிக்க அனுதினம் முயற்சிப்போம்.

Read more: ஆண்டவரின் திருக்காட்சி திருவிழா

ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்

ஆண்டின் இறுதி நாளாகிய இன்று நமது தாய் திருச்சபை  திருக் குடும்ப திருவிழாவைக் கொண்டாடுகின்றது. இன்றைய இறைவாசகங்கள் இறைவன்மேல் நம்பிக்கை கொண்ட இரண்டு குடும்பங்களை எடுத்துக் காட்டாக நம்முன் வைக்கின்றது. இறைவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவரின்மேல் ஆழமான விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டவர்கள்தான் ஆபிரகாம், சாராவின் குடும்பம், இறைமகன் இயேசுவின் பெற்றோர்களாகிய அன்னை மரியாள், யோசேப்பின் குடும்பம்.  ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார், மேலும் ஆபிராம்! அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைமாறு கிடைக்கும் என்ற இறைவார்த்தைகள் ஆபிரகாமிற்கு ஓர் புதிய ஆற்றலையும், நம்பிக்கையும் கொடுத்திருக்கும். ஆகையால்தான் இறைவன் தனக்கு கொடுத்த ஒரே மகனையும் பலியிட முன்வருகின்றார். ஆபிரகாமும் சாராவும் வயதில் முதியவராகவும் இருந்ததால் அவர்களுக்கு குழந்தை பெறாத குறையை இறைவன் நீக்கி வைக்கின்றார். ஆபிரகாம் இறைவனின் வாக்குறுதியையும் உடன்படிக்கையும்  நம்பியதால் அவரை விசுவாசத்தின் தந்தை என்று அழைககின்றோம்.  எனக்கு வாக்களித்தவர் நம்பிக்கைகுரியவர் என அவர் உள்ளத்தின் ஆழத்தில் நம்பியதால் துணிந்து இறைவன் காட்டிய பாதையில் பயணிக்க துணிகின்றார். இறைவன் ஆபிரகாமை அழைத்தபோது இவ்வாறு கூறகின்றார் “உன் நாட்டிலிருந்து உன் இனத்தவரிடமிருந்தும். புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்.நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழுங்குவேன். உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன் உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும் என்று கூறிய இறைவனின் வாக்குறுதி அவருடைய வாழ்க்கையில் முழுமையாக நிறைவேறியது என்பதை திருவிலியத்தில் காண்கின்றோம்.  இறைவனின் உடனிருப்பும் வாக்குறுதியும்  அவரை குணத்திலும் நற்பண்புகளிலும், தாளார மனத்திலும் வளரச் செய்தது. ஆபிரகாம் தாராள மனம் கொண்டதால்தான் லோத்துவுக்கு முதலிடம் தந்து நாட்டைப் பிரிக்க முதல் உரிமையைக் கொடுக்கின்றார்.  சோதோமுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார். சாலேம் அரசர்  உன்னத கடவுளின் அர்ச்சகராக விளங்கிய மெல்கிசெதேயின் ஆசீரையும் பெற்று இறைவனுக்கு உகந்தவராக விளங்கினார். இறைவனின் வாக்குறுதியை நம்பி, விசுவசித்து துணிவு நற்பண்பு, தியாகம், பொறுப்பு, கடமை, வழிநடத்துதல், மனுக்குலத்துக்கே மிகஆசீர்வாதமாய் திகழ்ந்தவர் நமது விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம். நானும் நீங்களும் இறைவன்மேல் நம்பிக்கை கொண்டு பிறருக்கு ஆசீயாக விளங்குகின்றோமா?

Read more: ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு