new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

தவக்கால சிந்தனை 15-02-2018

நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால் அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். திருப்பாடல்1:1-2

இறைவன் அவருடைய வார்த்தையின் வழியாக நம்மிடம் கேட்பது, இதோ பார் வாழ்வையும் நன்மையையும் சாவையும் தீமையையும் இன்று உனக்கு முன்பாக வைத்துள்ளேன் அவை எதுவென்றால் அவருடைய கட்டளைகளையும் நியமங்களையும் முறைமைகளையும் கடைபிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார். ஆம் இறைவன் இன்று நமக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளார். மறுபக்கம் அவருடைய பாதை இடுக்கமான குறுகலான ஒன்று. அருடைய கட்டளைகளைப் பின்பற்றும்போது சவால்களை ஏற்க நேரிடும் ஆனால் அவருடைய கட்டளைகளை கடைபிடித்தால் நாம் வாழ்வடைவோம், இறைவனுடைய ஆசியைப் பெறுவோம் என்று வாக்கு தருகின்றார். அத்தோடு நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார். கனிதரும் மரம் போலும், தாம் செய்யும் அனைத்திலும் வெற்றி பெறுவார் என்றும் வாக்கு தருகின்றார். இறைவனுடைய கட்டளைகளில் ஒன்றையாவது இன்று கடைபிடிப்போம். கனிதரும் மரமாக நற்குணங்களில் வளர்வோம்.

Read more: தவக்கால சிந்தனை 15-02-2018

நான்விரும்புகிறேன், உமதுநோய்நீங்குக

இன்றுஆண்டின்பொதுக்காலம்ஆறாம்ஞாயிறு. இன்றுநாம் அனைவரும் உலகநோயாளர்தினத்தைக்கொண்டாடுகின்றோம். இன்று நோய்கள்நீங்குவதற்குமனிதன்தேடும்வழிகள்ஏளாரம். இன்றுமருத்துவமனைகளில்நோயாளிகள்நிறைந்துகாணப்படுகின்றார்கள். நோயுற்றஒருமனிதன்தனதுநோய்நீங்குவதற்காகமருத்துவரைக்காணச்செல்கின்றான். மருத்துவர்சொல்லும்ஒவ்வொருவார்த்தையும்நம்புகின்றான். அவர்சொல்லும்ஒவ்வொருவார்த்தையையும்கடைபிடித்துநலம்பெறமுயற்சிஎடுக்கின்றான். உலகிலே பெரிய மருத்துவரான இறைவனின் சொற்களை கடைபிடித்து வாழ்ந்தால் நமக்கு நோய்கள் வருவதை தடுக்கலாம் அல்லவா? .லூர்து அன்னையின் திருவிழாவினை சிறபிக்கும் இந்த நாள் மிகவும பொருத்தமானதாக உள்ளது. அன்னையின் புனித தளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குணம் பெறுவது அனைவரும் அறிந்த உண்மை. இன்றுமக்கள்தங்களுடையநோய்கள்குணம் பெறும்படிபுனிததளங்களுக்கும்,தியானஇல்லங்களுக்கும்செல்கின்றார்கள்.அப்படிச் சென்றவர்களில் அனேகம் பேர் குணம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றதையும் அறிந்திருக்கின்றோம்.மனிதர்களாகிய நம் அனைவரும் துன்பங்களிலிருந்துவிடுதலைபெற்று மகிழ்ச்சியுடன் வாழத்தான் ஆசைப்படுகின்றோம். ஏங்கே செல்வது? எப்படி குணம் பெறுவது? என்று பல கேள்விகளுக்கு விடை கிடைப்பது ஆண்டவரிடத்தில். அனைத்து துன்பங்களிலிருந்து நமக்கு உண்மையான விடுதலை கொடுக்கக் கூடியவர் இறைவன் ஒருவர் மட்டுமே எனவேதான் அவர் நானே உன்னை குணமாக்கும் இறைவன் என்று வாக்கு கொடுக்கின்றார். இறைவன் மோசேயிடம் கூறுகின்றார் “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் என்கின்றார். (வி.ப15:26) ஆண்டவரின் குரலுக்கு மனிதன் செவி கொடுப்பது குறைவு ஆகையால்தான் பல பிரச்சனைகளுக்கு மனிதன் உள்ளாகின்றான். தவக்காலத்தை தொடங்க இருக்கும் நாம் அனைவரும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து அவருடைய விதிமுறைகளை கருத்தாய் கடைபிடிக்க முயற்சிபோம்.

Read more: ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு

v

இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார்

இன்று பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் நமக்கு தருகின்ற உண்மைகள் யாதெனில் துன்ப வேளைகளில் இறைவன் மேல் மனிதன் எவ்வளவு ஆழமான  நம்பிக்கை கொண்டுள்ளான் என்பதாகும். இதற்கு யோபுவின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டு. இறைவாக்கினர் யோபு நேர்மையாளராய்  இருந்தும் வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க  நேர்ந்தது. அவர் துன்பங்களைப் பார்த்து குழம்புகின்றார். அவருடைய நண்பர்களும் ஏளனமாகப் பேசுகின்றார்கள்என்று விவிலியத்தில் காண்கின்றோம். ஆனால் அவர் மனம் தளரவில்லை. அவர் இறைவன்மேல் கொண்ட நம்பிக்கை அசைய முடியாத ஒன்று. அவரை மேன்மேலும் உயரச் செய்தது. மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் பேராடவேண்டும். அப்போராட்டத்தில் இறைவன் நம்மோடு உள்ளார் என்ற ஆழமான நம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். இறைவனால் ஆகாதது ஒன்றும் இல்லை என்ற திடமான நம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். யோபு இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததால் அவருக்கு இரண்டு மடங்காக ஆசீர்வாதம் கிடைக்கின்றது.  இன்றைய காலக்கட்டத்தில் யோபு எதிர் கொண்ட துன்பங்களைப் போல் நம்முடைய வாழ்க்கையிலும் நடைபெற்றால் என்ன செய்வோம். பொறுமையாய் ஏற்றுக் கொள்கின்றோமா? அல்லது எனக்கு ஏன் இள்ளவு துன்பங்கள் என்று புழம்புகின்றோமா? இன்று நம்மில் பலர் இறைவனிடத்தில் புழம்புகின்றோம். எனக்கு மட்டும் ஏன்? என் குடும்பத்திற்கு மட்டும் ஏன்? என்று. இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். இறுதியில் இறைவன் நல்வழியை நமக்கு காட்டுவார் என்பது நிச்சயம்.

Read more: பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

என்னுடைய வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன்

இன்று ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு.  இறைமக்களாகிய நாம் அனைவரும் இன்று இறைவனுடைய வார்த்தையை அறிவிக்க கடமை பட்டுள்ளோம்.  நற்செய்தியை மக்களின் மனங்களில் விதைக்க இன்று உண்மையான இறைவாக்கினர்கள் நமது குடும்பம், சமுதாயம், வேலைத் தளம், குழும்பம் ஆகிய இடங்களில் உறுவாக வேண்டும். அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு என்ற இறைவார்த்தை இக்காலக்கட்டத்தில் மிகப் பொருத்தமாக உள்ளது தானே? ஆன்மீக விழுமியங்கள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டு போவதைக்  காண்கின்றோம் அல்லவா. இறைவனுடைய வார்த்தைக்கு செவிமடுக்க நம் அனைவரின் செவிகள் பலநேரங்களில் இடம் கொடுப்பதில்லை. உலகம் காட்டும் வழிகளுக்கு உடனடியாக செவிகொடுத்து அதன்படி வாழ்க்கையை கட்டி எழுப்ப இன்று நமது சிறய உள்ளங்கள் துடிக்கின்றதுதானே?  அதனால்  ஏற்படும் விளைவுகள் தனிமை. மன அழுத்தம், தீய பழக்கங்கள் நம்மிடையே வளர ஆரம்பிக்கின்றது அதனால் பலருடைய வாழ்வு அமைதி இல்லாமல் திசை திரும்பிக் கொண்டிருக்கின்றது. வார்த்தைக்கு செவி கொடுத்தால் புது வாழ்வு நம்மில் மலரும் என்பது உண்மை.

Read more: பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு