new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால் அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார். எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். திருப்பாடல் 25:8-9

இன்றைய பதிலுரைப் பாடலில் தாவீது அரசர் வழிகாட்டிப் பாதுகாக்குமாறு இறைவனிடம் வேண்டுகின்றார். இறைவன் நல்லவராகவும் நேர்மையுள்ளவராகவும் இருப்பதால்தான் தாவீது அவரை நம்பி வேண்டுகின்றார். இறைவனின் உடன்படிக்கையையும் ஒழங்குமுறையையும் கடைபிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளவனாய் விளங்கும் என்ற வாக்கு தருகின்றார். இன்று நானும் நீங்களும் இறைவனுடைய நியமங்களை எவ்வாறு கடைபிடிக்கின்றோம். இறைவனுக்கு முதலிடம் கொடுக்கின்றோமா? இறைவனை முழு உள்ளத்துடன் நேசிக்கின்றோமா? திருப்பாடல் 25, 5வது இறைவசனத்தில் தாவீது அரசர் இறைவனிடம் மன்றாடுவதை நமது கவணத்திற்கு கொண்டு வருவோம். ‘உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில் நீரே என் மீடபராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன். இறைவனிடம் இன்று நாம் எழுப்பும் மன்றாட்டு எதுவென்றால் எனக்கு ஒரு நல்ல வீடு வேண்டும், நல்ல கார் வாங்க வேண்டும், நல்ல வேலை வேண்டும், நல்ல தொழில் வேண்டும், குடும்ப சமாதானம் வேண்டும், கடன் தொல்லை தீர வேண்டும், எனது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், எனது நோய் தீர வேண்டும் என்று ஏராளமான வேண்டுதல்கள் நம் உள்ளத்திலே உள்ளன அல்லவா? ஆனால் எப்பொழுதாவது இறைவனுடைய நியமங்களையும் அவருடைய உயிருள்ள வார்த்தைகளையும் கற்றுக் கொள்ளவும், உண்மை நெறியில் வழிநடத்தவும் முயற்சி எடுத்துள்ளோமா? நம்மில் ஒருசிலர் எடுத்திருக்கலாம் ஆனால் அவற்றை எவ்வாறு கடைபிடிக்கின்றோம். சிந்தித்து செயலில் இறங்குவோம். அருளின் காலமாகிய இந்நாட்களில் இறைவனுக்கென்று சமயம் ஒதுக்கி பாவிகளாகிய நமக்கு நல்வழியைக் கற்பிக்க வேண்டுமென்று அவரின் துணை நாடுவோம்.

சிந்தனை

Read more: தவக்கால சிந்தனை 18-02-2018

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ஏனெனில் காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது “என்ற மையக்கருத்தினை வழங்குகின்றது. திருமுழக்குப் பெற்று, கிறிஸ்துவின் நாமத்தை சுமந்து கொண்டிருக்கும் நமக்கு தாய் திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் என்னும் நாட்களை கொடையாக கொடுக்கின்றது. மனம் மாற்றத்தின் காலம். அருளின் காலம். மன்னிப்பின் காலம். சிறப்பாக இறைவனுடன் ஒப்புரவாகும் காலம். பிளவுபட்ட உறவுகளை புதுப்பிக்கும் காலம். எனவேதான் மனம் என்னும் பாலைவனத்தில் பயணிக்க இறைவன் அருளின் காலத்தை நமக்கு கொடுக்கின்றார். நாற்பது நாட்களையும் இறைஅருள் நிறைந்த புனித நாட்களாக இருக்கவும், சிறு சிறு நற்செயல்களைச் செய்து அருளின் காலத்தை செலவிக்க முயற்சிப்போம்.

மனம் மாற்றத்திற்கு உன்னத எடுத்துக்காட்டு இறைமகன் இயேசு. அவர் தனது பணிவாழ்வைத் தொடங்குமுன் யோர்தான் நதியில் திழுமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றவுடன் பாலைவனத்திற்கு எடுத்துச் சென்று நாற்பது நாட்கள் அலகையினால் சோதிக்கப்படுகின்றார். இறைமகன் இயேசு இறைவார்த்தை என்னும் ஆயுதத்தால் அலகையிடம் வெற்றி கொள்கின்றார். இறைமகன் இயேசு அன்புடன் குற்றத்தை கண்டித்தார். பரிசேயர்களிடமும் சதுசேயர்களிடம் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள், வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே பரிசேயரே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே! முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும் என்று கூறுகின்றார். இந்த கடினமாக இறைமகன் இயேசுவின் சொற்கள் இன்று நமக்கும் மிகவும் பொறுத்தமாக இருக்கின்றது அல்லவா. நமது ஆன்மா என்னும் மனத்தை முதலில் தூய்மையாக்க வேண்டும். சிறு மனம் என்னும் ஆன்மாவாகிய கிண்ணத்தில் இறைவனுக்கு எதிராக சேகரித்து வைத்துள்ள ஒவ்வொரு கொள்ளைப் பொருட்களையும் ஒப்புரவு என்னும் அருள் கொடையால் எடுத்துக் களைவோம். ஆன்மா என்னும் கிண்ணத்தை தூய்மையாக்குவோம்.

நவீன உலகத்தில் மனம் மாற்றத்திற்கு இடமே இல்லை. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியது போல் பாவம் எது என்று உணராமலும், பாவம் என்ற எண்ணத்தையும் மறந்து, மனம் போகின்ற போக்கில் வாழ்ந்து அருள் கொடைகளை இழந்து தவிக்கின்றோம். நவீன உலகில் பாவம் என்று சொல்லுவதற்கு ஆதாரம் ஒன்றும் இல்லை அதனால் தான் இன்று எதையும் செய்யத் துணிக்கின்றோம். திருத்தூதர் பேதுரு தனது இரண்டாம் திருமுகத்தில் கூறுகின்றார் “அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள்போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஓரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார். ஆகையால் இறைவனுடைய இரக்கத்தையும் கருணையையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இறைவன் நம்மிடம் விரும்புவது நாம் எப்பொழுதும் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்று. தூய உள்ளத்தொடு பயணிக்க துணிவோமா?

நாற்பது நாட்களை கடந்து செல்லும் போது, நின்று நிதானமாக, மனம் என்னும் மண்ணில் வேராகப் படர்ந்திருக்கும் பாவம் என்னும் வேர்களுக்கு மன்னிப்பு என்னும் இறைவனுடைய அருள் நீரை பாய்ச்சிட ஒவ்வொரு நாளும் முயற்சி எடுப்போம். இறைவேன்மேல் ஆழமான நம்பிக்கையும் விசுவாசமும் வைக்கவும். அவர் காட்டிய அன்பின் மன்னிப்பின் பாதையில் பயணிக்க அருள்வேண்டி மனம் மாற்றத்தின் காலத்தில் இறைமகன் இயேசுவுக்கு சிறந்த மகனாக மகளாக வாழுவோம் அவ்வாறு நாம் வாழும்போது அவருடைய நற்குணங்கள் நம்மில் மிளிரும். இறைமகன் இயேசு எவ்வாறு இறைவார்த்தையால் அலகையின் சூழ்ச்சியை வென்றாரோ அதுபோல நீங்களும் நானும் இறைவர்த்தையின் வழியாக அலகையின் சூழ்ச்சியிலிருந்து வெற்றி பெறுவோம். வாழ்வு தரும் வார்த்தையானவர் நம்மோடு இருக்கும் போது பயம் ஏன்?

உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! 1பேதுரு 2:4-5a

 

 

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுற்றவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். திருப்பாடல் 86:15

இன்றைய நற்செய்தியில் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்பவரை இயேசு அழைத்தபின் அவருடைய வீட்டில் விருந்தின் போது இயேசுவுடன் வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டு பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின்மேல் குற்றம் சாற்றுகின்றனர். இயேசுவின் மறுமொழி அவர்களுடைய சிந்தனையை குழப்பி இருக்கும். நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன் என்கின்றார். எப்படியொரு பனிவான பதில். நமது அன்றாட சமுதாய வாழ்விலும், குடும்ப வாழ்விலும், குழும்ப வாழ்விலும் பலருடைய குற்றங்களை சுட்டிக் காட்டுவது நம்முடைய குணத்தின் மிகப்பெரியக் கொடை ஆனால் அது தவறு என்பதை ஒருபோதும் நாம் உணர்வதில்லை. நாம் அனைவரும் தவரக்கூடியவர். இறைவன் ஒருவருக்கு மட்டும் நம்மை முழுமையாக அறியக்கூடியவர். எவ்வளவு பெரிய பாவிகளாய் இருப்பினும் நம்மை மன்னிப்பவர். ஏனெனில் அவர் நல்லவர். மன்னிப்பவர். அவரை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். பாவிகளின் நண்பன். சிலுவையில் மன்னிக்க கற்றுக் கொடுத்தவர். இரக்கமும் அருளும் நிறைந்தவார்களாய் வளர்வோம்.

Read more: தவக்கால சிந்தனை 17-02-2018

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கி, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. திருப்பாடல் 51:17

இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவது போல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு என்று இறைவாக்கினர் எசாயா நூல் வழியாக இறைவன் இன்று நமக்கு தருகின்ற வாக்கு. தவக்காலத்தில் நோன்பு இருக்க வேண்டும் என்று தலைமுறை தலைமுறையாக நாம் அனைவரும் கடைபிடித்து வருகின்றோம். ஏன் ஒரு புதிய நோன்பினை நாம் பின்பற்றக் கூடாது? இறைவனுடைய மக்கள் செய்யும் பாவத்தையும்; வன்முறை செயல்களையும் பேரொலி எழுப்பிக் கூப்பிடு நிறுத்திவிடாதே என்று கேட்கின்றார். பாவம், வன்முறை என்று தெரிந்தும் ஏன் அமைதிகாக்கின்றோம், பிறரிடமிருந்து நாம் பாவத்தை மறைக்கின்றோம், வன்முறையான பேச்சுகளுக்கும் இடம் கொடுக்கின்றோம். பாவம் செய்பவர்களை கண்டித்து திருத்த இன்று பயப்படுகின்றோம். பாவத்திற்கு துணை போகின்றோம. நேற்று ப்ளோரிடாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த வன்முறையால் 17 மாணவர்கள் உயிர் இழந்தனர்? 19 வயதுடைய ஒரு இளம் மாணவனின் தீச்செயல். அவனுடைய முகப்புத்தகத்தில் கண்டும் அவனுடைய பாவச் செயலைச் கூறுவதற்கு யாரும் குரல் எழுப்பவில்லை. ஆயிரக்கணக்கான பாவங்கள் நமது கண்முன் நடந்தும் குரல் எழுப்ப பயப்படுகின்றோம். இனிமேல் நமது அனுதின வாழ்க்கைப் பயணத்தைக் கடந்து செல்லும் போது நம்மில் ஒருவர் பாவத்தில் விழுவது தெரிந்தால் உடனே துணிவுடனும் அன்புடனும் பரிவோடும் தவற்றை எடுத்ததுரைப்போம் என்று முடிவு எடுப்போம்.

Read more: தவக்கால சிந்தனை 16-02-2018

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு