new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திமுகத்தை இடையறாது நாடுங்கள்! அவர் செய்த வியத்தகு செல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். திருப்பாடல் 105:4-5

 

இறைமகன் இயேசுவின் இன்று நமக்கு வழங்கும் நற்செய்தி கு “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று “என்று கூறுவது அவரைப்பற்றியதாகும். தான் நேசித்த மக்களே சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று ஓலமிட்டனர். இறைமகன் இயேசு தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்பட்டு ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள் என்று அறிந்த இயேசு சிலுவையை நோக்கி பயணம் செய்து, அதன் வழியாக வெற்றி கொண்டார். யோசேப்பும் தனது சொந்த சகோதர்களால் விற்கப்பட்டு பல துன்பங்களுக்கு ஆளாகி இறுதியில் எகிப்து நாட்டின் அரசனாக விளங்கினார். ஆம் நமது வாழ்வில் எதிர் கொள்ளும் துன்பங்கள் வழியாக இறைவன் நம்மை தூய்மை ஆக்குகின்றார் என்பது உண்மை. இறைவனை நம்பினால் வெற்றி எப்பொழுதும் நமக்க உண்டு. இறைமகன் இயேசுவும் யோசேப்பும் துன்பங்களை தாங்கி இறைவன்மேல் நம்பிக்கை கொண்டு அனைத்திலும் உண்மையோடும், நேர்மையோடும் வாழ்ந்து வெற்றி பெற்றதுபோல் நாமும் துன்பத்தைக் கண்டு ஓடாமல் அதனை துணிவுடன் ஏற்றுக் கொள்ள அருள் வேண்டுவோம். அனுதின வாழ்வில் யாருக்கும் தீமை செய்யாமல் நன்மை செய்து சொல்லிலும் செயலிலும் தூய்மையுடன் வாழ்வோம். பிறரை இல்லாது பொல்லாது சொல்லி குறைகூறியதற்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்போம்.

Read more: தவக்கால சிந்தனை 02-03-2018

நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால் அவர் அண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். திருப்பாடல் 1:1-3

இறைவாக்கினர் எரேமியா வழியாக இறைவன் இன்று நமக்கு கொடுக்கும் மிக முக்கியமான நற்செய்தி “மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர் என்றும், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெறுபெற்றோர், என்றும் எடுத்துரைக்கின்றார். இறைவன்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர். இன்று நானும் நீங்களும் நம்பிக்கை வைப்பது எவற்றின் மேல். உண்மையான ஒரு நல்ல உள்ளத்தைக் காண்பது இன்று மிகவும் கடினமாக உள்ளது. சுயநலம், பொறாமை, போட்டி, பணம், செல்வம், அவனைவிட நான் பெரியவனாய் இருக்க வேண்டும், இன்று நாம் அனைவரும் ஆடம்பர வாழ்க்கையைத் தேடி தேடி இரவும் பகலும் ஓடுகின்றோம். இறைவனுக்கு எதிராக பொய்யான வாழ்க்கையை வாழந்து கொண்டிருக்கின்றோம். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம், நிலைவாழ்வு தரும் உணவுக்காக உழைக்க இறைவன் நம்மை அழைத்துள்ளார். செல்வந்தர் வாழ்க்கையில் ஒரு குறைபாடும் இல்லை ஆனால் அவருடைய ஆன்மாவை காப்பாற்றுவதற்கு அவர் செல்வம் உதவ இல்லை. பாதாளத்தில் இருந்து கதருகின்றார். அவ்வாறான நிலை நமக்கு தேவையா? சிந்திப்போம்? நம்முடைய வாழ்க்கை அவ்வாறு இருக்க வேண்டாம். எனவே நீரோடை நடப்பட்ட மரம் போல் இறைவனில் நம்பிக்கை வைத்து முன்னோக்கி பயணிப்போம். துன்பத்திலும் கண்ணீரிலும் நம்மோடு இருக்கும் நண்பன்தான் உண்மையானவர். அவர் தான் நமது இறைவன். இறைவா நீர் ஒருவர் மட்டும் தான் நிரந்தரம். மறக்க வேண்டாம் மனிதனே!

Read more: தவக்கால சிந்தனை 01-03-2018

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! திருப்பாடல் 31: 19

வாருங்கள் எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். அவர்மீது குற்றம் சாட்டுவோம் என்று இன்றைய முதல் வாசகத்தில் காண்கின்றோம். நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு தன்மீது மரணத் தண்டனை விதிப்பார்கள். அவரை ஏளனம் செய்து சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள் என்று கூறுகின்றபோது. திருத்தூதர்களுள் இருவர்களுடையத் தாய் அவரிடம் வந்து என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறம் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும் என்று கேட்கின்றார். நமது சமுதாயத்தில் இன்றும் இப்படிபட்ட நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டுதானே உள்ளன. நமது பங்குகளில், துறவற குழுமத்தில், நகர சமுதாயத்தில், அரசியல் தலைவர்கள், சட்டசபை வல்லுநர் அவையில், பணித்தளங்களில் வேலை செய்யும் நாம் அனைவரும் எதிர் கொள்வது, பதவி, அதிகாரம், பணம், சாதிப் பிளவு, சமூகப் பிளவு, பிறர்மீது எளிதில் குற்றம் சாட்டுவது, அதிகாரம், ஆணவம், பணத்தின் மோகம் இருப்பதால்தான் இன்று சிரியாவிலும், உலக நாடுகளில் ஏற்படும் கொடுமைகள், அவலங்கள், ஒரு சமூகத்திற்கு எதிராகச் ‘சூழ்ச்சி செய்வது. கூலிப் படைகள் வைத்து கொலைகள், பாலியல் வன்முறைகள, நன்மைகள் பல செய்தும் குற்றவாளிகள் என்று எளிதாக பிறரை குற்றம் சாட்டுவது நம் அனைவரின் உள்ளத்தில் படிந்து கிடக்கும் குணங்கள். திருத்தூர் பவுல் தனது திருமுகத்தில் கூறுகின்றார் “ நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால் அது பாவம் என்று கூறுகின்றார். (யாக்கோபு 4:17) சிறிய பொறுப்பில் இருக்கும் நீங்களும் நானும் இயேசுவைப் போல் தொண்டு செய்வோம். தூய்மையுடனும் நேர்மையுடனும் நமக்கு கொடுத்திருக்கும் பொறுப்பைச் செய்தால் நாம் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? நம்மை மற்றவர் இகழும்போதும் தூற்றும்போதும், குற்றம் சுமத்தும் போது மனம் தளராமல் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள அருள் வேண்டுவோம்.

Read more: தவக்கால சிந்தனை 28-02-2018

நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். திருப்பாடல் 50:23

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர் என்று இறைவன் வாக்கு தருகின்றார். மேலும் இறைவாக்கினர் எசயாவின் வழியாக கூறுவது ‘உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன் எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும் என்கின்றார். அருளின் காலத்தை நல்லமுறையில் பயன்படுத்துவதற்கு தாய் திருச்சபை ஒவ்வொரு நாளும் ஆழமான அர்த்தம் நிறைந்த வாசகங்களை நமக்குத் தருகின்றன். நமது வாழ்வை மாற்றிக் கொள்ள சந்தர்ப்பம் தருகின்றது. நமது ஆன்மாவின் ஆழத்தில் பயணம் மேற்கொண்டு இரத்த நிறமாய் சிவந்து துவண்டு கிடக்கும் பாவத்தை ஆராய்ந்து ஆய்வு செய்து, அவற்றை முழுமையாக கிறிஸ்துவின் இரத்தில் கழுவித் தூய்மையாக்க வேண்டுமென்று உருக்கமாக இறைமகன் இயேசுவிடம் இன்று மன்றாடுவோம். பாவிகளை நேசிக்கும் இறைவன் நம்மோடு இருக்கின்றார்.

Read more: தவக்கால சிந்தனை 27-02-2018

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு