new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

இன்றைய பதிலுரைப் பாடலில் முதல் இறைவசனத்தைப்பற்றி கருத்தில்  எடுப்போம். கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நேஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டுள்ளது. நாம் தொலைதூரம் பயணம் செய்யும் போதும், வேலைப் பழுவின் போதும், அதிகதூரம் நடக்கும் போதும், நமக்கு தாகம் எடுப்பது வழக்கம். தண்ணீர்  கிடைக்குமா என்று அங்கும் இங்கும் தேடி தண்ணீர் கிடைத்தவுடன் அருந்தி நம்முடைய தாகத்தை தீர்க்கின்றோம் அதுவும் குளிர்ந்த தண்ணீர் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் அருந்துகின்றோம். குடிக்கும் தண்ணீருக்கு தாகம் கொள்ளுவதுபோல், இறைவனுடைய அன்பையும் அருளையும்  நமது வாழ்வில் பொக்கிஷமாக பொற்றுக் கொள்ள தாகம் கொள்கின்றோமா? நிலைவாழ்வு அளிக்கும் இறைவனை முழுஉள்ளத்தோடு அன்பு செய்கின்றோமா?

சிரியா மன்னனின் படைத் தலைவரான நாமானின் தொழுநோய் இறைவாக்கினர் எலிசாவின் சொற்களின் வழியாக இறைவன் அவருடைய நோயைக் குணப்படுத்துகின்றார்.  இறைவாக்கினர் எலிசாவின் சொற்களை நாமான் முததில் விசுவசிக்கவில்லை ஆனால் அவர்களுடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி இறைவாக்கினர்களின் சொற்படி நடக்க உற்சாக்ப்படுத்தினார்கள். அதன்பிறகுதான் அவர் யோர்தான் நதியில் ஏழுமுறை மூழ்கி நற்சுகம் பெற்றார்.  இன்று நாமும் அப்படித்தானே? அனுதின வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இறைவனின் நற்பண்புகளை  அவருடைய வார்த்தையின் வழியாக நம்மிடம் எடுத்துரைக்கும் போது நம்பாமல் மனம் போன போக்கில் வாழந்து கொண்டிருக்கின்றோம். எத்தனைமுறை நாம் அவற்றை அலச்சியமாக எண்ணியிருக்கிறோம்.  அவருக்கு என்னத் தெரியும் என்ற வினாக்களை எழுப்புகின்றோம்? இறைவனே மிகத்தெளிவாக இறைவாக்கினர் எசாயா வழியாக கூறியுள்ளார்  “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல , உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்று.  ஆம் இறைவன் தான் அன்பு செய்த மக்களுக்கு செங்கடலை இரண்டாகப் பிரித்து வழி அமைத்தவர். இரவும் பகலும் அவர்களோடு பாலைநிலத்தில் பயணித்தவர். அவர் இன்றும் அற்புதங்களும் அடையாளங்களும் செய்து கொண்டு தான் இருகக்கின்றார். எனவே இறைவனுடைய வார்த்தையிலும்,  உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு சாட்சியாய் வாழ்வோம்.

சிந்தனை

இறைவன் மீது உண்மையாக நான் தாகம் கொண்டுள்ளேனா? அவருடைய அன்பின் ஆழத்தை சுவைக்க வாஞ்சையோடு அவரை நாடிச் செல்கின்றோனா அல்லது எனது தேவைகளுக்கா மட்டும் அவரை நாடுகின்றேனா?

என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன். திருப்பாடல் 42

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. திருப்பாடல் 19: 7-8

இன்றைய முதல் வாசகத்தில் மோசே மக்களிடம் கூறுகின்றார் “கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்பது நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உன்கிருத்தல் ஆகாது என்றும், மேலும் அவருடைய நியமங்களை புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென்று விரும்புகின்றார். இறைவன் அழைக்கப்பட்ட அனைவருக்கும் வல்லமையும் ஞானமுமாய் இருக்கின்றார். இன்று நமக்கு எத்தனையோ வேற்றுத் தெய்வங்கள் நம்மிடம் ஊசலாடிக்கொண்டு மனித இனைத்தையே அழித்துக் கொண்டு இருக்கின்றன. பணம் ஒரு வேற்றுத் தெய்வமாக இருக்கலாம், பதவி ஒரு வேற்றுத் தெய்வமாக இருக்கலாம், செல்வம் ஒரு வேற்றுத் தெய்வமாக இருக்கலாம். இணையதளம் ஒரு வேற்றுத் தெய்வமாக இருக்கலாம், அலைபேசியாக கூட ஒரு வேற்றுத் தெய்வமாக இருக்கலாம், எத்தனையோ மனித உள்ளங்கள் மனிதனையே தெய்வமாக வணங்குகின்றனர். உண்மையிலும் ஆவியிலும் வழிபடும் ஒரு இறைவன் மட்டும் உலகம் முடிவுவரை நம்மோடு பயணிப்பவர். இறைமகன் இயேசு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி அவரைமட்டும் வழிபட நமக்கு கற்றுக் கொடுத்தவர். இறைதந்தை மகன் உறவு என்றும் தூய்மை நிறைந்து ஒளிமயமாக இருந்தது. ஆம் காலம் நெருங்கி வந்துவிட்டது விழிப்பாய் அறிவு தெளிவோடு இருக்கவும், தூய்மையான வாழ்வு வாழவும் நம்மை இறைவன் அழைக்கின்றார். என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன் என்று வாக்கு தருகின்றார். எனவே நிலை வாழ்வைக் கொடுக்கும் உன்னத இறைவனை மட்டும் ஆராதிப்போம். சிறய ஆன்மாவில் வேருன்றி கிடக்கும் அனைத்துப் பாவங்களை களைவோம். ஆண்டவர் எவ்வளவு இனியர் என்று சுவைத்துப் பார்த்து தூய்மை நிறைந்த உள்ளதோடு வழிபடுவோமா?

Read more: தவக்கால சிந்தனை 04-03-2018

உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் பயணிக்கின்றோம். உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் என்ற இறைவார்த்தையைபற்றி சிந்திப்போம். இறைமகன் எருசலேமுக்குச் சென்ற பொழுது கோவிலில் கண்ட காட்சி அவருடைய மனதிற்கு ஆழமான வலியைத் தந்திருக்கும். ஆடு, மாடு, புறா விற்பவரையும், நாணயம் மாற்றுவோரையும் கண்டு கோபம் கொண்டு கயிறுகளால் சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலிருந்து துரத்துகின்றார். அங்குள்ள அனைத்தையும் கவிழ்த்துப்போடுகின்றார். என்தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள் என்று கூறுகின்றார். இறைமகன் இயேசு கோபம் கொள்வதை இங்கு காண்கின்றோம். இன்று நாம் அனைவரும் இறைவனின் ஆலயத்தில் ஒன்று கூடும்போது ஒரு சில நேரங்களில் நிகழ்வது மிகவும் வருத்தம் தரக்கூடிய செயல்கள் என்று தான் சொல்லலாம். இறைவனின் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் நம்மை எரிக்கின்றதா? அவருடைய ஆசிரைப் பெறுவதற்கு ஆவலுடன் வருகின்றோமா? நடைமுறையில் அடிக்கடி காண்பது இறைவனின் இல்லத்திற்கு வரும்பொழதுதான் அனைத்து முரண்பாடுகளும், சண்டைச் சச்சரவுகளும் இடைபெறுகின்றன. ஏன்? இன்று இறைமகன் இயேசு நமது ஒன்றுகூடலின்போது நமது மத்தியில் வந்தால் என்ன நடக்கும், சாட்டையை எடுத்து நம்மை துரத்துவாரா? அல்லது நவீன உலகத்தில் தூப்பாக்கிகூட அவர் கையில் கிடைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப்பார்ப்போம். இன்று நாம் அனைவரும் நவீன உலகத்தின் நடைமுறைகளோடுதானே இறைவனின் இல்லத்தில் நுழைந்து அவரையும் நாடுகின்றோம். இறைவனின் இல்லத்தில் நமக்காக இரவும் பகலும் பிரசன்னமாய் வாழுகின்ற இறைவனைவிடவும் பலிப்பீடத்தில் உயிருடன் அப்பத்தின்வடிவில் மறுரூபமாகும் இயேசுவைவிடவும் சில நேரங்களில் தொலைபேசியில் உள்ளவர் மிகவும் முக்கியமானவராக கருதுகின்றோம் அப்படித்தானே? இறைவனை விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று இன்று மனிதன் நினைக்கின்றான் ஆனால் அது ஒருபோதும் முடியாத காரியம். இறைவனை உளமாறப் புகழ்ந்து பாடுவதற்குக்கூட நம்மிடையே போட்டிகளும் பொறாமைகளும் ஊறிக்கிடக்கின்றன. எங்கே செல்லுகின்றது நமது கிறிஸ்துவ சமுதாயம்? இறைமகன் இயேசுவை நமது பெயரில் கிறிஸ்துவன் என்று இணைத்துக் கொண்டு நாம் அவரை முழுமனதுடன் அன்பு செய்து, அவரை விசுவசிக்கின்றோமா? நாம் அனைவரும் இறைவன் வாழும் கோவில்தானே? இன்று தவற்றை சூட்டிக் காட்டினால் அவன் பொல்லாதவன்? அவன்மேல் தவறாக சுமத்தும் பாவங்கள்தான் எத்தனை? இறைவன் வாழும் நமது உள்ளம் தூய்மையாக இருந்தால் நமது செயல்களும் வார்த்தைகளும் தூய்மையாக இருக்கும் என்பது உண்மை. குற்றத்தை எடுத்துச் சொல்ல இயேசுவைப்போல் துணிவு வேண்டும்.

Read more: தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

ஆண்டவர் இரக்கமம் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர். என்றென்றும் சினங்கொள்பவரல்லர். திருப்பாடல் 103:8-9

 

இறைவாக்கினர் மீக்கா வழியாக இறைவன் இன்று வாக்கு தருவது “ உமக்கு நிகரான இறைவன் யார்? உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார் என்று. ஆம் நமது இறைவன் மன்னிக்கும் இறைவன் என்று நினைத்து பாவ வழியில் நடந்து கொண்டே இருப்பது நல்லது அல்ல. நாம் அனைவரும் மனம் மாற வேண்டும். ஒவ்வொரு நாளும் மனம் ஆய்வு செய்ய வேண்டும். அனுதின வாழ்க்கைப் பயணத்தில் இறைவனுக்கு எதிராகப் எத்தனை பாவம் செய்கின்றேன் என்று ஆய்வு செய்ய வேண்டும். பாவம் எது என்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டுள்ளோம். மேலைநாடுகளில் வாழும் நமக்கு கோவில் இல்லை, செபம் இல்லை, பாவசங்கீர்த்தனம் இல்லை? எல்லாமே நன்மை என்று தோன்றுகின்றதா? இல்லை மக்களே! மனம் மாற்றத்தைப் பெறுவோமா? காலம் நிறைவேறிவிட்டது மனம் மாறுவோமா? இன்றைய பதிலுரைப் பாடல் வழியாகவும் அவருடைய பொறுமையையும், இரக்கத்தையும், அருளையும் ஆழமாக விளக்குகின்றது. இறைவன் நமது குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார். நமது நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். இறைவா இன்று நான் வாழ்வது உமது இரக்கத்தினால் மட்டுமே. ஆண்டுகள் ஆண்டுகளாக, மாதங்கள் மாதங்களாக, நாட்கள் நாட்களாக, நொடிகள் நொடிகளாக என்னை மன்னித்து வாழ்வு தருகின்ற நேசம் நிறைந்த தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி ஐயா! நான் மனம் திரும்பி வந்தால் என்னை முழுமையாகஅரவணைத்துக் கொள்பவர். இறைவா என்னிடம் காணும் அனைத்துப் பாவக் கறைகளை கழுவி குணமாக்கும். ஊதாரிப் பிள்ளையாய் அலைந்த காலத்திற்காக மனம் வருந்துகின்றேன்.

Read more: தவக்கால சிந்தனை 03-03-2018

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு