new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவி கொடுத்தால் எத்துணை நலம். திருப்பாடல் 95:7

நமது ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர் என்று திருப்பாடல் 95, 7 வது இறைவசனத்தில் காண்கின்றோம். உண்மைதானே அனைத்திற்கும் மேலான பேரரசர்தான் நாம் வழிபடும் நேசம் நிறைந்த இறைவன். இன்று இறைவாக்கினர் எரேமியா வழியாக இறைவன் கூறுவதைக் கவணிப்போம் “என் குரலுக்குச் செவி கொடுங்கள். அப்போது நான் உங்களுகுக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும் என்று. இன்று மனிதானாக இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் இறைவனுடைய குரலுக்கு செவிசாய்த்து, அவருடைய நியமங்களை உண்மையாக கடைபிடித்தால் உலகில் அமைதியும், அன்பும் நிலவும் அல்லவா? இறைவனுடைய குரலுக்கு செவிசாய்க்காமலும், அவருடைய நியமங்களை கடைபிடிக்காமலும் வாழ்வதால்தான் இன்று உலகில் யுத்தம், வன்முறை, தற்கொலைகள், வெறுப்பு, ஆணவம், அகங்காரம், சுயநலம், வெட்டு குத்துக்கள், முரட்டுப் பிடிவாதங்கள், பழிவாங்கும் தீய எண்ணங்கள், சமுதாயத்தைக் குழுப்பும் தீச்செயல்களுக்கு உடந்தையாகி சிறுவர் இளைஞர் பெரியோர் அனைவரின் உள்ளதில் தீச்செயல்கள் வேரூன்றி வளருகின்றது அல்லவா. இறைவன் பல்வேறு வழிகளில் எச்சரித்தும் நாம் அவர் குரலுக்கு இன்று செவிசாய்ப்பதில்லை. தவக்காலத்தில் நீங்களும் நானும் பரிசுத்தமாய் வாழ்வதற்கு இன்னும் ஓர் சந்தர்ப்பத்தை நமக்கு கொடுக்கின்றார். எனவே முதல் வாசகத்தில் தரப்பட்டுள்ள தீச்செயல்கள் நம்மில் வளர்த்தால் அவற்றை அகற்றிவிட முயற்சி செய்வோமா?

சிந்தனை

தீச்செயல்களை நம்மிடமிருந்து அகற்ற ஒரே ஒரு வழி, நல்லதொரு மன ஆய்வு செய்து இறைவன் முன்பு அனைத்தையும் கண்ணீருடன் சமர்ப்பித்து மன்னிப்பு கேட்போம். எத்தனையோ முறைகள் அவரது குரலைக் கேட்காமல் நமது விருப்பம் போல் நடந்தமைக்கு மனம் வருந்துவோம்.

அன்று மெரிபாவிலும் , பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்களை இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

திருப்பாடல் 95:8

உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்: அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார். திருப்பாடல் 147:3, 11

இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களிடம் அவர் கற்றுத் தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுக வேண்டும் என்றும், அப்படி பின்பற்றி நடந்தால் மக்கள் முன்னிலையில் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்குவார்கள் என்று கூறுகின்றார். மேலும் நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டோ? உண்மைதான் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர். எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும் எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார் என்கின்றார். இறைமகன் இயேசு நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமையில் மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றார் “தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.( லூக்கா 18:7-8) . இறைவன் நமது குரலுக்கு என்றும் செவிசாய்ப்பவர். அவருடைய திருச்சட்டம் நிறைவும் புத்துயிரும் அளிப்பவர், எளிமையான உள்ளத்தோருக்கு ஞானத்தை கொடுக்கின்றவர். இனிவரும் நாட்களில் இறைவனுடைய திருச்சட்டங்களைக் கடைபிடிக்க முயற்சி செய்வோமா?. நாட்டின் அரசாங்கத்தின், பணிதளத்தின், வாகனத்தின், சாலையின், விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்கும் நமக்கு பலவேளைகளில் இறைவனின் நியமங்களை கடைபிடிக்க மிகவும் கஷ்டமாக உள்ளது அப்படித்தானே? மேலும் நமக்கு எளிதான வழிமுறைகளைப் பின்பற்றி இறைவனை ஏமாற்ற முயல்கின்றோம் அது சரியா? சிந்திப்போம். இறைவனின் நியமங்களை கடைபிடித்தால் நிச்சயமாக புதுவாழ்வு நம்மில் வளரும். நமது இறைவன் நம்பிக்கைகுரியவர். அவருடைய வார்த்தை உயிருள்ளது. என்றும் அழியாதது. முயற்சி செய்து பார்ப்போமா?

Read more: தவக்கால சிந்தனை 07-03-2018

ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். திருப்பாடல் 25: 13-14

இன்றைய முதல் வாசகத்தில் “ ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார். இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம்; உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாதீர்; மாறாக. உம் பரிவிற்கு ஏற்பவும். இரக்க பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும் என்று அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் மன்றாடுகின்றார். அவரைப்பொல் இன்று நாம; அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம். இன்று பல்வேறு தீமைகளுக்கு அடிமையாகி இறைவனுடைய உண்மையான விழுமியங்களை எளிதாக பின்பற்றி வருகின்றோம். இன்று குடும்பவாழ்விலும் சமூக வாழ்விலும், தனி வாழ்விலும் இறைவனின் திருவுளம் எது என்பதை தீர்மானித்தால் நமது வாழ்வு வளமாக இருக்கும். பல நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் அழிவுக்கு இட்டுச் செல்கின்றது. தீமைகள் நிறைந்திருக்கும் இருளான இவ்உலகத்தில் இறைவனின் ஞானம் நமக்கு மிகவும் அவசியம். இன்று இறைவிடம் நமது குற்றங்களை அறிக்கையிட்டு கண்ணீர் சிந்தி அவருடைய பாதத்தில் சரணடைவோம். இறைவனுக்கு எதிராக பாவம் நம்மிடம் உண்டு என்றால் இன்று அவற்றை நமது வாழ்விலிருந்து களைவோம். இறைவன் பாவிகளை மன்னிப்பவர். உள்ளத் தூய்மையுடன் மனம் திரும்பினால் அவர் நம்மை ஏற்றுக் கொள்வார். இறைவனை நமது வாழ்க்கையில் வரும்படி கூவி அழைப்போம். உள்ளத்தை கடினப்படுத்த வேண்டாம். இறைவனையும் அவருடைய வார்த்தையையும் நம் வாழ்வில் முழுமையாக ஏற்றால் நம்முடைய வாழ்வில் அவருடைய வழிநடத்துதலை அறிந்து அனுபவிக்க முடியும். தவக்காலத்தில் ஒரு சிறிய முயற்சி எடுப்போமா?

Read more: தவக்கால சிந்தனை 06-03-2018

இன்று இறைவனிடம் முழு உள்ளத்தோடு நாம் செய்த பாவங்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.

ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன். திருப்பாடல் 25:4-5

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு