new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். திருப்பாடல் 34:18-19

இறைப்பறிறல்லாதவர்கள் அவர்களுடைய உள்ளத்தில் சொல்லிக் கொள்வது “நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள் என்ற இறைவனின் வாக்கு இன்று உலகில் எல்லாத் திசைகளிலும் நமது கண்முன்பே நடக்கின்றது அல்லவா. இன்று நேர்மையோடும் நீதியோடும் தங்களது கடமைகளைச் செய்பவர்கள் எல்லாவகையானத் துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகின்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சமூகவளைத் தளையங்களில் வந்தச் செய்தியைக் கண்டோம். நீ பெத்லகேமில் பிறந்தாயா? உன்னைச் செருப்பில் அடிப்பேன்? இன்னும் தாகதச் சொற்கள், மனித உள்ளத்தில் இரக்கம் இல்லாதச் செயல்கள். விரட்டி விரட்டி அடித்தல், ஓட ஓட அடிக்கின்றார்கள். இறைமகனை இயேசுவை அன்று இப்படித்தானே செய்தார்கள். அவர் நன்மை மட்டும் செய்தவர். உண்மையை எடுத்துரைத்தவர். தீயவற்றையும், தீய நெறிகளையும் கண்டித்தவர். பரிசேயர்களையும் சதுசேயர்களிடம் வெளிப்படையாக கடிந்து கொண்டவர். கோவிலில் கற்பித்தவரை கொல்ல முயற்சிக்கின்றார்கள். இன்றும் இறைமகனை ஒவ்வொரு நாளும் பல்வேறான வடிவத்தில் சிலுவையில் ஒவ்வொரு நாளும் அறைந்து கொண்டுதான் இருக்கின்றோம். இறைவனுடைய வார்த்தை வாழ்வுக்கு பொக்கிஷமாக உயிருள்ள வார்த்தையை எரிந்து சாம்பலானதையும் காண்கின்றோம். இறைவன் உருவில் படைக்கப் பட்ட மனிதன் மனிதனையே காட்டிக் கொடுத்தும், பணத்திற்கும், பதவிக்கும், எத்தனை பொய்கள், எத்தனை வெளிவேடங்கள் போட்டு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஓட்டுகின்றோம். உண்மை பேசுபவரை சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கின்றோம். மற்றவர்களின் உணர்வுகளைப் புரியாமல் புண்படுத்துகின்றோம், உண்மையைக் கடைபிடித்தால் தனித்துவிடப்படுகின்றோம். இந்த உலகில் இருக்கும் எதுவும் நமக்கு நிரந்தரம் அல்ல என்பதை உள்ளத்தின் ஆழத்தில் உணர வேண்டும். தீமையைவிட்டு விலகு, நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன் அவர் செவிகள் அவர்களது மனறாட்டைக் கேட்கின்றன என்ற இறைவனின் வார்த்தைக்கு செவிமடுப்போம். இன்றுமட்டும் நாம் செய்யப் பொகின்ற எல்லாக் காரியங்களை நேர்மையுடனும் நீதியுடனும் செய்வதற்கு முயற்சிப்போம்.

சிந்தனை

தீயோரைத் தீவினையே சாகடிக்கும் நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். என்ற இறைவார்த்தையின்மேல் நம்பிக்கை கொண்டு, நமக்கு தீமை செய்பவர்களுக்காக இறைவனிம் மன்றாடுவோம்.

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். திருப்பாடல் 34:17

தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் , ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குசசசெவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.

திருப்பாடல் 145:18-19

இன்றைய பதிலுரைப் பாடல் வழியாக இறைவன் தரும் ஆறுதலான வார்த்தைகள் நமது உள்ளத்திற்கு வலிமையும்   தைரியத்தையும் கொடுக்கின்றது. அவர் கூறுவது “ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்குகின்றார். ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே, தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார், அவர்களது மன்றாட்டுக்குச் செவி சாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். இறைவன் தரும் “வாழ்வு தரும்” வார்த்தை உயிருள்ளதும் ஆற்றலுள்ளதும் அல்லவா? ஒவ்வொரு வார்த்தையையும் வாசிக்கும்போது மனதிற்கு புத்துயிர் தருகின்றதுதானே? இறைவாக்கினர் எசாயா அதிகாரம் 49 வழியாக பல்வேறு வகையான வாக்குறுதியையும் இறைவன் இன்று நமக்குத் தருகின்றார். “பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்றும் கூறுகின்றார். இறைவன் நம்மை எவ்வளவு அன்பு செய்கின்றார் என்று பாருங்கள். அவருடைய அன்பு தாயின் அன்பைவிடப் பெரியது என்று வெளிப்படுத்துகின்றார். நீங்களும் நானும் அவருடைய அன்பை உணர்கின்றோமா? இறைமகன் இயேசு அவருடைய தந்தையை முழுமையாக அன்பு செய்தார். தந்தை மகனின் உறவு தூய்மையாக இருந்து. இன்று இறைவனுக்கும் எனக்கும் உள்ள அன்பு தூய்மையானதா? பாவிகளாகிய நம்மேல் அவர் எவ்வளவு இரக்கம் கொண்டுள்ளார். நன்றி கூறுவோமா?

சிந்தனை

இரக்கமும் கனிவும் எளிதில் சினம் கொள்ளாதவரான இறைவனை முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்கின்றேனா? இன்று சிறிது நேரம் இறைவனுடன் உண்மையுடன் உறவாடுவோமா?

ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமை மிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். திருப்பாடல் 145: 3-4

அமைதிகொண்டுநானேகடவுள்எனஉணர்ந்துகொள்ளுங்கள்; வேற்றினத்தாிடையேநான்உயர்ந்திருப்பேன்; பூவுலகில்நானேமதட்சியுடன்விளங்குவேன். படைகளின்ஆண்டவர்நம்மோடுஇருக்கின்றார்; யாக்கோப்பின்கடவுளேநமக்குஅரண். திருப்பாடல் 46:10-11

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமறற்றிருந்த ஒருவரை தனது வார்த்தையால் குணமளிக்கின்றார். அவருடைய வேண்டுதலை இறைமகன் இயேசு மிக அக்கறையுடன் கேட்கின்றார். அவர் இறைமகன் இயேசுவிடம் கூறுவதைக் கவணிப்போம் “ஐயா. தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார் என்று உடல் நலமற்றவர் இயேசுவிடம் கூறுகின்றார். தண்ணீர் ஒருவருடை அழுக்கை அகற்றுகின்றது. இறைவாக்கினர் எலிசா படைத்தலைவனான நாமானிடம் “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும் “ என்ற வாக்கினை நம்பி யோர்தானில் ஏழுமுறை மூழ்கியதால் அவருடைய தொழுநோய் நீங்குகின்றது. திருமுழக்கு யோவான் யோர்தான் ஆற்றில் தங்களது பாவங்களை அறிக்கையிட்டு ஞானஸ்தானம் பெற்றார்கள். இன்று நமது பாவங்களை கண்டு அறிந்து கொள்ள ஆவியானவரின் துணை தேவை. பல்வேறு தீயசக்திகள் நம் உள்ளத்தில் நோயாக வளர்ந்து கொண்டிருக்கலாம். பயப்படாமல் இறைவனிடம் எடுத்துரைத்து இன்று மன்னிப்பு கேட்போம்.

இறைவன் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே என்று வாக்கு தருகின்றார். ஆகவே இறைவா உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன் என்று நமது பாவத்தை ஆய்ந்து அறிந்து இறைவன் முன்பு ஒவ்வொன்றாக சமர்பித்து இறைவனுடைய மன்னிப்பை பெறுவோம்.

சிந்தனை

பல்வேறு மன நோயினால் பாதிக்கப்பட்டவருக்காக இன்று செபிப்போம்.

இறைவனுக்கு எதிராகச் செய்யும் பாவத்தை கைவிட இன்று முயற்சிப்போம்.

ஈசோப்பினால் என்னகக் கழுவியருளும் நான் தூய்மையாவேன்; என்னைக் கழுவியருளும்; உறை பனியிலும் வெண்மையாவேன். திருப்பாடல் 51:7

துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன்; இடிமுழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீற்று அருகில் உங்களைச் சோதித்தேன். என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! திருப்பாடல் 81:7-8

இறைவாக்கினர் ஓசேயா வழியாக இறைவன் இன்று கூறுவது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பிவா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: ‘தீவினை அனைத்தையும் அகற்றியருளும். மனமாற்றத்தின் காலமாகிய தவக்காலத்தில் இறைவன் நம்மை அவரிடம் திரும்பி வரவேண்டும் என்று அழைக்கின்றார். நம் அனைவரின் பற்றுதியின்மையை குணமாக்குவேன், அவர்கள் மேல் உளமார அன்புகூர்வேன் என்கின்றார். உள்ளத் தூய்மையை விரும்பும் இறைவனுக்கு செவி கொடுத்தால் அவருடைய ஞானத்தால் நம்மை நிரப்புவார் என்று வாக்கு தருகின்றார். நமது தீச்செயல்களையும், பாவங்களையும் இறைவனிடம் சொல்லி அறிக்கையிட்டால், நம்மேல் அவர் கொண்ட சினம் தணியும் என்றும், பனிபோல் இருப்பார், லீலிபோல் மலருவார். லெபனோனின் மரம் போல் வேரூன்றி நிற்பார். ஒலிவ மரம் போன்றும். பசுமையான தேவதாரு மரம் போன்றவர் என்றும். இன்னும் எத்தனையோ ஆசி மொழிகள் நமக்கு தருகின்றார். அவருடைய நிழலில் குடியிருப்போம் என்கிறார். தீச்செயல்கள் நம்மிடம் இல்லாது இருக்கும்போதுதான் இறைவனையும், அடுத்திருப்போரையும் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்தமுடியும் என்று தெள்ளத் தெளிவாக கூறுகின்றார். இன்று சிறிது நேரம் இறைசமூகத்தில் அமர்ந்து நமது உள்ளத்தை ஆய்வு செய்து உள்ளத்தின் ஆழத்தில் படிந்து கிடக்கும் பாவங்களை ஒவ்வொன்றாக அவரிடம் கொடுத்து அவருடைய இரக்கம் என்னும் அருள்மழையால் கழுவச்சொல்லி கெஞ்சி மன்றாடுவோம். இறைவன் நம்மை ஒருபோதும் புறம் தள்ளுவதில்லை. ஆவியானவரின் துணையுடன் இறைசமூகத்தில் அமர்ந்து அவருடைய குரலுக்கு செவி கொடுப்போமா?

சிந்தனை

இன்று நம்மை வெறுப்போரையும், நம்மைப் புரிந்து கொள்ளாதவர்களையும் இறைவனிடம் கொண்டு வந்து அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று செபிப்போம்.

ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்; என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். திருப்பாடல் 51:7

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு