new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

'மன்னிப்பில் புது வாழ்வு'

'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்' லூக்கா: 6:36

 

MARY Our Lady of the Poor 3


அன்னை மரியாள் இறைவனின் பார்வையில் பேறுபெற்றவர். பெண்களுக்குள் ஆசீர் பெற்று நமக்கா உலக மீட்பரை ஈந்தவர். இரக்கம் நிறைந்த இறைவனுடைய வேண்டுதலுக்கு ஆம் என்று பதிலுரைத்து, உன்னத இறைவனுடைய வல்லமையால் அவர் நிழலிட்டபோது 'அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்' என்று இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார். அவருடைய புகழ்ச்சி பாடலின் வழியாக அவர் நமக்கு கூறுவது, இறைவன் பேரன்புமிக்கவர், ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர். இரக்கமும் பரிவும் அருளும் நிறைந்தவர் என்று. ஆம் அன்னை மரியாள் தன்னுடைய வாழ்வில் இறைவனை சுமந்து அவரைப்போலவே இரக்கமுள்ளத் தாயாக வாழ்ந்து இன்றும் என்றும் நமக்காக பரிந்து பேசுபவராக திகழ்கின்றார். கானாவில் நடைபெற்ற திருமணவிழாவின் போது மனிதனுடைய தேவைக்காக தனது அன்பு மகனிடம் பரிந்து பேசி அவர்களுடையத் தேவைகளை நிறைவு செய்வதுடன், அந்நிகழ்வின் வேளையில் மனுக்குலம் முழுவதும் வாழ்வின் நெறியை பின்பற்ற வேண்டுமென்று வாழ்வுக்கு ஈட்டுச் செல்லும் ஓர் உன்னத உண்மையை எடுத்துரைக்கின்றார். அது என்னெவென்றால் 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்பது. மனுக்குலத்தின் தேவைகளை உணர்ந்த அன்னைமரியாள் 1933 ஆம் ஆண்டு மரியற் என்னும்; சிறுமிக்கு எட்டுமுறை காட்சி தந்து நம்மை 'ஏழைகளின் கன்னிகை' என்று தன்னை வெளிப்படுத்தினார்.; மேலும் சிறப்பாக நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் ஜுபிலி ஆண்டில் இறைவனுடைய நேசத்தையும் இரக்கத்தையும் ஆழமாக பெறவும், நாம் பெற்றக்கொண்ட இறைஅனுபவத்தை மற்ற உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் அழைக்கின்றார் எனவே இரக்கத்தின் ஆண்டினை அருள்நிறைந்த ஆண்டாக கொண்டாடி மகிழ்விக்க 'மன்னிப்பில் புது வாழ்வு' என்ற மையக்கருத்தில் திருயாத்திரை எடுக்க இருக்கின்றோம். இரக்கதின் தாயாகவும், ஏழைகளின் தாயாகவும் விளங்கும் நம்முடைய பாசமிகு அன்னையின் ஆசீரை நிறைவாகப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முக்கிய நிகழ்வாக
10.30 மணி : ஒப்பரவு குணமாக்கும் வழிபாடு
12.00 மணி : மரியன்னை அருட்காட்சி அளித்த ஆலயத்தில் தரிசிப்பு
15.00 மணி : குணமாக்கும் நற்கருணை வழிபாடு
16.00 மணி : திருநாள் திருப்பலி
முக்கிய குறிப்பு :
13-05-2016 வெள்ளிகிழமை மாலை 19.00 மணிக்கு விஷேட திருப்பலி அன்னை காட்சி கொடுத்த சிற்றா லயத்தில் நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம் .

 

வருக வருக அன்னையின் அருளை பெறுக

Address: Rue de l'Esplanade 57, Banneux, Belgium B- 4141

Getting there:
Banneux is small, almost a hamlet, and is located just southeast of the town of Liege.
There are trains almost hourly from Brussels Central taking from about 1 to 2 hours depending on the train. There are also a few trains from Bussels-Midi. These are the high-speed Thalys trains that require seat reservations.  The Thalys trains also serve cities such as Paris.  Travel time to or from Paris on these trains is about 2 hours (Paris Nord Station).
 
From the train station in Liege you take a bus, it is about 40 minutes to Banneux.  Liege also has an airport, although there are few international flights.

மேலதிக தொடர்புகளுக்கு

அருட்தந்தை டெரென்ஸ் அடிகளார் : 0031631978515, அருட்சகோதரி ஜோபி : 0031464525914, அன்டன்ஜெயக்குமார்: 0031478589276,  சுகிர்தராஜா:0031475501447, பெனடிட்:0031455323279, திருமதி.ஜெராட்:0031343563549,  திரு.கிளிட்டஸ்:0031786170540,  டிகால்:0031616437559

Email :This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு