new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

வாரம் ஒருமுறை தொடர்செபமாலை

உலக, குடும்ப சமாதனத்திற்காக!


'தந்தையைப்போல் இரக்கமுள்ளவர்களாய்'


இயேசுவைச் சிலுவையில் அறைந்த போது, அவருடைய அன்புத்தாய் அவர் அருகில் இருந்து அவருடைய துன்பத்திலும் பங்குகொண்டுவர். இறைவனின் அழைப்புக்கு 'ஆம்' என்று பதில் கூறிய முதல், இறுதிவரை இறைவனின் மீட்புத் திட்டம் நிறைவேறும் வரை அவர் துன்பம் என்னும் வாழ்க்கைப் படகில் பயணம் செய்தவர். வேதனையும் துன்பத்தையும் நன்றாக உணர்ந்த அன்புத்தாய். சிலுவையில் இறைமகன் இயேசு அவருடைய அன்புத் தாயை, நமக்குத் தாயாக கொடுத்தள்ளார்; எனவே நமக்கென்று ஒரு அன்புத்தாய் இறைவனிடம் என்றும் பரிந்து பேச இருப்பதில் நம்பிக்கை கொண்டு இந்த செப முயற்சியை ஆசீர்வதிக்க தந்தையாம் நம் அன்பு இறைவனிடம்; முழுமனதுடன் மன்றாடுவோம். போர்கள், பயங்கரவாதம், வன்முறைகள், சமூகத் தீமைகள், இயற்கை அழிவுகள், மறைந்து அமைதி நிலவவும். சமாதானத்தின் அன்னையாக விளங்கும் நமது தாயிடம், இருகரம் குவித்து துன்பப்படும் உள்ளங்களின் கணணீருடன் நாமும் இணைந்து, அன்னையை நோக்கி செபக் குரல்களை; எழுப்புவோம். இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனித உள்ளத்தில் வளர்ந்துவரும் அன்பிற்கு எதிரான தீமையின் சக்திகள் அழிந்து நாம் அனைவரும் வழியும் உண்மையும் உயிருமான இயேசுவின் பாதையை பின்பற்றி அன்பிலும் மனிதநேயத்திலும் வளர்ந்து, இறைவனின் இரக்கத்தைப் பெற்று உலகத்தில் அமைதி நிலவவேண்டுமென்று ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஐந்து செபமாலை பக்தியுடனும்; ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் ஒரே குடும்பமாக இந்த கருத்திற்காக செபிக்க செபக்குழுவாக பலநாடுகளிலிருந்து தியாக உள்ளங்கள் இந்த குழுவில் இணைந்துள்ளன. செபமாலை என்னும் ஆயுதம் வல்லமையும் ஆற்றலும் நிறைந்தது. எனவே வல்லமை நிறைந்த இந்த செப ஆயுதம் கொண்டு உலகில் பரவிக்கொண்டிருக்கும் இருளை அகற்றுவோம். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்கயோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு:18:19-20

 

நவம்பர் மாதம் 2015 ஆண்டு சிறிய முயற்சி எடுத்துள்ளோம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை செபிக்க வேண்டும்.

 

செபகுழுவில் இணைந்துள்ள நாடுகள்: நெதர்லாந்து, ஜெர்மணி, இந்தியா, இலங்கை, பிரான்ஸ், பிரெசில்


வல்லமை நிறைந்த தொடர் செபக்குழுவில் இணைய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்!

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு