new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Monday, March 25, 2019
Text Size
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும். எபிரேயர்:11:6

நெதர்லாந்து ஆன்மிக பணியகம் 1993ம் ஆண்டு ஜேர்மன் பணியக இயக்குனர் அருட்பணியாளர் ஜெயசேகரம் அடிகளாரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனை  தொடர்ந்து பணியகத்துக்கு என்று ஒரு இயக்குனர் இல்லாத காரணத்தால் ஜேர்மன் பணியக இயக்குனரே எமது பணியகத்தையும் கண்காணித்து ஆலோசனைகளையும் திருப்பலிகளையும் நிறைவேற்றி வந்தனர். அருட்பணி ஜெயசேகரம் அடிகளாரின் பின் அருட்பணியாளர் றெக்னோ அடிகளார்  நெதர்லாந்தின் அனைத்து பங்குகளும்  வளர வித்திட்டார் .

 

அதன்பின் எமது நாட்டுக்கே ஒரு குருவானவர் தேவை என்பதனை உணர்ந்து அருட்பணி றெக்னோ அடிகளாரின் முயற்சியாலும் எமது பங்கு மக்களின் வேண்டுதலினாலும் லிம்புர்க் ஆயர் ஊடக நாம் எமக்கென ஒரு குருவானவரை தரும் படி எமது தாய் நாட்டு ஆயர்களிடம்  வேண்டுகோள் விடுத்தோம் .

 

அதன் பயனாக 2002 ம் ஆண்டு அருட்பணியாளர் டயஸ் அடிகளார் பெல்யியம் நாட்டில் படித்து கொண்டு  எமது பணிவளர 2004 ம் ஆண்டு வரை தனது ஆளுமையில் கீழ்   நெதர்லாந்தில் அனைத்து மறை மாவட்டங்களிலும்   பங்குகளை நிர்வகித்தார். அவர் தனது படிப்பு முடிந்து தாய் நாடு சென்ற பின் எமது நாட்டுக்கு தனியாக ஒரு குருவானவரை தாய் நாட்டின் அமல மரி தியாகிகள் சபையில் இருந்து அருட்பணியாளர் சந்திரபோஸ் அடிகளார் 2004 ம் ஆண்டு வருகை தந்தார். அவர் தனது பணியை தொடர முடியாத காரணத்தால் அடுத்த வருடமே 2005 தாயகம் திரும்பினார்.

 

இதன் நிமித்தம் எமது பணியகம் எமக்கென ஒரு இயக்குனர் இல்லாத சூழ்நிலையில். நாம் எமது பணியக நிர்வாக அங்கத்தவர்கள் அனைவரும் அருட்பணியாளர் சேவியர் அடிகளாரை எமக்கு தற்காலிகமாக எமக்கென ஒரு குருவானவர் தாய் நாட்டில் இருந்து வரும் வரைக்கும் பணியாற்றும் படி வேண்டினோம் அதனை முழுமையாக ஏற்று      அருட்தந்தை சேவியர் அடிகளார் பணியக இயக்குனராக பணியாற்றுகிறார்.  இதனை நாம் எமது ஆயர் இல்லத்துக்கு எமது பணியக தலைவர் டேக்கன் வன் ரேன்ஸ் ஊடக அறிவித்து அவர் சம்மதத்துடன் எமக்கு பணியாற்றுகிறார். அத்துடன் ஜேர்மன் பணியக இயக்குனர் அருட்பணியாளர் அந்தோனி பாலா அடிகளார் எமக்கு அவ்வப்போது ஆலோசனைகளும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

 

நெதர்லாந்து பணியகத்தின் ஆன்மீக  குருவானவர்

நெதர்லாந்து தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின்  ஆன்மீக இயக்குனராக  கடந்த நான்கு  ஆண்டுகளாக தந்தை சேவியர் அடிகளார் பணியகத்தின்  வளர்சிக்காகவும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் தனது பணியை தளராத உள்ளதுடன்  செய்து வந்தார்.  தந்தை தனது புதிய பணியின்  நிமித்தம் யேர்மனியில் கடமை புரிய வேண்டி உள்ளதால் தாம் எமக்கு செய்த பணியில் இருந்து இடமாற்றலாகி  செல்கின்றார் . தந்தையின்  அயராது உழைப்பிற்கும் ஊக்கத்திற்கும் எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள் .

 தந்தை சேவியரின் பணியை  தொடர்ந்து செய்யவும் பணியகத்தை வழிநடத்தவும்  அருட்தந்தை  ஜோ அடிகளார் 26-03-2011  அன்று அதிகார புர்வமாக  எமது பணியகத்தலைவர் Deken Van Rens அவர்களின் முன்னிலையில் அவரின் அனுமதியுடன் பொறுப்பேற்று கொண்டார். தந்தை ஜோஅடிகளார் தற்போது நெதர்லாந்தில் ’sHertogenbosch ஆயரின் கீழ் நெதர்லாந்த மக்களுக்கு பணியாற்றி வருகின்றார். அவரது பணி எமது புலம் பெயர் மக்களுக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுவதுடன் தந்தை ஜோ அடிகளார் மனமுவந்து இப்பணியை செய்ய ஏற்று கொண்டதற்கு எமது மனமார்ந்த நன்றிகளும் செபங்களும் என்றும் உண்டு.

 

நன்றியுடன் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம்  நெதர்லாந்து

திருச்சபை நிகழ்வுகள்

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 19 days earlier)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 15 days earlier)

Palm Sunday
(Sunday, 14 April 2019, 20 days later)

Maundy Thursday
(Thursday, 18 April 2019, 24 days later)

Good Friday
(Friday, 19 April 2019, 25 days later)

Holy Saturday
(Saturday, 20 April 2019, 26 days later)

Easter Sunday
(Sunday, 21 April 2019, 27 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு