new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

பணியகத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாகம் :

பணியகத்தை நிர்வகிப்பதற்கு பொதுக்கூட்ட அமர்வில் அந்த அந்த பங்கு இறைமக்களால் தொடர்பாளர் தெரிவு செய்யப்படுவார். தெரிவு செய்யப்பட்ட தொடர்பாளர்களில் இருந்து செயலாளர் பொருளாளர் ஆகியவர்களை தெரிவுசெய்யப்பட்ட தொடர்பாளர்களே தெரிவுசெய்வார்கள்.

நிர்வாகம் மூன்று வருடங்களை கொண்டிருக்கும்
ஒருவர் தொடர்ந்து இருதடவைக்கு மேல் அதேபதவி வகிக்க முடியாது (உபதலைவர் செயலாளர் பொருளாளர்)
ஒருவருடத்திற்கு குறைந்தது நான்கு தடவை நிர்வாக சந்திப்பு இடம்பெறும். தேவை ஏற்படின் உபதலைவர் கூட்டத்தை கூட்டமுடியும்.
நிர்வாக உறுப்பினர்கள் பணியகத்தையும் பங்கையும் நேசிப்பவராகவும். ஓருவரை ஒருவர் மதிப்பவராகவும் தனிப்பட்ட நட்பு உறவு குடும்பம் இவைகளுக்கு அப்பால் பொதுநலனை சிந்திப்பவராகவும் இரகசியம் காப்பவராகவும் பணியக செயற்பாடுகளைசரியான விதத்தில் வெளிப்படுத்துபவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியக செயற்பாடுகள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் பொதுக்கூட்டத்திலும் நிர்வாககூட்டத்திலும் கதைப்பதே சிறந்ததாகும்.
கடமைகளை அலட்சியம் செய்து ஒத்துளைக்க விரும்பாத நிர்வாக உறுப்பினர்கள் பணியில் இருந்து விலக போசகரால் கேட்கபடுவார்.போசகர் இல்லாத இடத்து உபதலைவரால் கேட்கப்படும். தங்கள் நிர்வாகபணியில் இருந்து விலக விரும்பும் உறுப்பினர்கள் தங்களுடைய விலகல் கடிதத்தை போசகரிடமோ அல்லது உபதலைவரிடமோ கொடுக்க வேண்டும்.

ஒருபங்கிற்கு தொடர்பாளர் எவ்வாறு தெரிவுசெய்யப்படுவார்.

ஓருவர் தியாக மனப்பான்மையுடனும் ஆன்மிக வழத்துடனும் தானாக செயற்பட முன்வரலாம்.
போசகரால் அல்லது பங்குமக்களால் தெரிவுசெய்யப்படலாம்.
இவ்வேளையில் தெரிவுசெய்யப்படுபவரின் ஆன்மீகமும் தியாகசிந்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

தொடர்பாளர் பங்குமக்களால் ஏற்றுகொள்ளபடக்கூடியவராகவும் மக்களிடையே ஒற்றுமைக்கு பாலம் அமைப்பவராகவும் இருத்தல் வேண்டும். பொதுவிடயங்களில் தனிநட்புஇ உறவுஇ குடும்பம் கடந்தநிலையில் அனைவரையும் உள்வாங்கி செயற்படுபவராக இருத்தல் வேண்டும்.
கடமைகளை அலட்சியம் செய்து ஒத்துளைக்கவிரும்பாத தொடர்பாளர்களை தொடர்பாளர் பணியில் இருந்து விலக போசகர் அல்லது உபதலைவரால் கேட்கப்படும்.

 

தொடர்பாளரின் செயற்பாடுகள்

குடும்பங்களை சந்தித்தல்
திருப்பலிகள் விழாக்களுக்கு பங்கு மக்களை தயார் படுத்தலும் அழைப்புவிடுதலும்
பங்குகளில் நடைபெறும் இன்பதுன்பங்களில் பங்கெடுத்தலும் நிர்வாகத்திற்கு அறிவித்தலும்.
நிர்வாக பொதுகூட்டங்களில் தவறாது சமூகம்தருவது விரும்பத்தக்கது.
திவருட்சாதனங்கள் ஞானக்கடமைகளை யாராவது நிறைவேற்றவிரும்பினால் போசகருக்கோ அல்லது அருட்சகோதரிக்கோ அறிவிக்கவேண்டும்.

உபதலைவரின் செயற்பாடுகள்

கூட்டங்களை ஆயத்தப்படுத்தல்
நிர்வாகத்தை நெறிப்படுத்தல்
வங்கிநடைமுறைகளை பொருளாளருடன் செயற்படுத்தல்.
போசகருடன் இணைந்து செயற்படுதலும் அவர் இல்லாதவிடத்தில் அவர்சார்பில் அவரின் அனுமதியுடன் செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.

செயலாளரின் செயற்பாடுகள்

கூட்டத்தின் முடிவுகளை செயற்படுத்துவதும் அறிக்கை தயார்படுத்தலும்.
அதிகாரபூர்வமான தொடர்புகளை ஏற்படுத்துதல்.
நிர்வாககுழுவின் அனுமதியோடு செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
அதிகாரபூர்வமான ஆவணங்களை பாதுகாத்தலும் தன்பணிக்கால முடிவில் அதிகாரபூர்வமாக புதியநிர்வாகத்தில் கையளித்தலும்.

பொருளாளரின் செயற்பாடுகள்

கணக்கறிக்கை தயாரித்தலும் அதை தெளிவுபடுத்தலும்
வங்கி தொடர்புகளை உபதலைவருடன் சேர்ந்து செயற்படுத்தல்.
பணியக செலவுகளை மேற்கொள்ளுதல் (திருப்பலிஇ சிற்றுண்டிஇ குருவானவர்)

வழிபாட்டு குழு

இதற்கு பொறுப்பாக போசகரும் அருட்சகோதரியும் பாடகர் குழாமும் பொறுப்பாக இருப்பார்கள்.
அதன் செயற்பாடுகள்

திருப்பலிக்கு ஆயத்தம் செய்தல்.
வழிபாடுகளை ஆயத்தம் செய்தல். (செபமாலைஇ குடும்பதரிசிப்பு)
முக்கிய திருவிழாக்களுக்கு பாடகர் குழாமை ஆயத்தம் செய்தல்.
வேதாகம கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல்.
இளைஞர் குழு ஆய்வு ஒன்றுகூட்டுதல்.
மறைக்கல்வி கற்பித்தல்.
சர்வதேச வழிபாடுகளில் பங்கெடுத்தலும் உதவி செய்தலும்.

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டமானது வருடத்திற்கு இரண்டு அல்லது ழூன்று தடவை தேவைக்கேற்ப கூட்டப்படும்.பொதுகூட்டத்தின்போது அமைதியானமுறையில் ஒரவருக்க ஒருவர் மதிப்பளித்து கலந்துகொள்ளுதல்வேண்டும்

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு