new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Thursday, May 23, 2019
Text Size
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். 1பேதுரு:4:8

 

நவீன உலகத்தில் அறிவியிலும் விஞ்ஞானமும் வளர்ந்து வருகின்ற காலக்கட்டத்தில் நாம் அனைவரும் உலகப் போக்கின்படிதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது நடைமுறைகள், பண்பாடுகள் அனைத்தும் உலகின் போக்கின்படிதான் உள்ளது. நம்முடைய வாழ்வு மிகவும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். மேலை நாடுகளில் வாழும் நாம் அனைவரும் நாம் செய்கின்ற பாவங்களுக்கு மனம் வருந்துவதில்லை, பாவம் நிறைந்த உள்ளத்துடன் இறைமகன் இயேசுவின் திருஉடலை உட்கொண்டு அவரை வேதனைப் படுத்துகின்றோம். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள் எனறு காண்கின்றோம். இன்று நமது கிறிஸ்துவ சமூகத்தில் எத்தனை பிளவுகள், எத்தனை மனக் கசப்புக்கள், நான் உயர்ந்தவன், நீ உயர்ந்தவன் என்ற பாகுபாடுகள். நமது வழிபாடுகளில் இறைவனின் வல்லமையை பெற்றுச் செல்கின்றோமா? அல்லது மனக்கசப்பை பெற்றச் செல்கின்றோமா? சிந்திக்கவும். திருப்பலியில் பங்கு பெறும்போது ஒரே உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்து அவருடன் வாழ்ந்தோம் என்றால் நம்மிடையே இப்டிபட்ட மாற்றங்கள் காண்பதற்கு வாய்ப்பு இல்லை. இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக மட்டுமே நம்மால் உலகை வெல்ல முடியும். உயிர்த்த இறைமகன் இயேசு நம்மிடம் வாழ்கின்றார் என்று நானும் நீங்களும் நம்புகின்றோமா? இறைவார்த்தையை நமது வாழ்வில் தியானித்து அருள்வாழ்வில் வளர்ந்தால் நம்மால் ஒரே உள்ளம் கொண்ட இறைசமூகமாக வாழ முடியும்.

திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி 18: 19-20 இறைவசனங்களில் இறைமகன் இயேசு கூறுகின்றார் “ உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே இருக்கின்றேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் “என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை நம்புவோம். இறைமகன் இயேசுவின் அருள் பிரசன்னத்தை இழக்காமல் இருக்க முயற்சி செய்வோம்.

இரக்கம் மிகுந்த இயேசுவே நாங்கள் பாவிகளாய் வாழ்ந்தும் எங்களை அன்பு செய்வதற்காக உமக்கு நன்றி.

இரக்கம் மிகுந்த இயேசுவே நீர் எங்களை மன்னிப்பது போல் நாங்கள் எங்களையே மன்னிக்க முடியாத தருனத்திற்காக எங்களை மன்னித்தருளும்.

இரக்கம் மிகுந்த இயேசுவே உமது அளவிட முடியாத இரக்கத்தை உணராமல் ஊதாரித் தனமாக உலகப் போக்கில் வாழ்வதற்காக எங்களை மன்னித்தருளும்.

இரக்க மிகுந்த இயேசுவே உமது திரு உடலை பாவம் நிறைந்த உள்ளத்தோடு வாங்கியதற்காக எங்களை மன்னித்தருளும்.

இரக்கம் மிகுந்த இயேசுவே நவீன உலகத்தில் அனுபவிக்கும் பலவகையான சுகங்கள் உமது அன்பிற்கு எதிராக உள்ளதை என்பதை நன்கு உணர்ந்தும் அதற்கு அடிமையாக வாழ்வதற்கு எங்களை மன்னித்தருளும்.

இரக்கம் மிகுந்த இயேசுவே மேலை நாடுகளில் வாழும் தமிழ் இறைசமுகத்தின் மீது உமது இரக்கத்தைப் பொழிவதற்காக நன்றி செலுத்துகின்றோம். விசுவாசம் மறைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாங்கள் அனைவரும் நற்செய்தியின் விழுமியங்களை நன்கு கற்று அதன்படி வாழ்ந்து கிறிஸ்துவ சமூதாயத்தை கட்டி எழுப்ப வரம் தந்தருளும்.

நாங்கள் அனைவரும் உம்மிடமிருந்து பிறந்தவர்கள் ஆகையால் எங்களால் உலகை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் முன்னோக்கி பயணிக்க, உமது ஆவியானவரின் கொடைகளை எங்கள் அனைவரின் மீதும் பொழிந்தருளும்.

இயேசு அவரிடம், நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். யோவான் 20:29

திருச்சபை நிகழ்வுகள்

Ascension
(Thursday, 30 May 2019, 7 days later)

Pentecost
(Sunday, 09 June 2019, 17 days later)

Whit Monday
(Monday, 10 June 2019, 18 days later)

Trinity Sunday
(Sunday, 16 June 2019, 24 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு