new1 new2 new3 new5 new6
°F | °C
Error! Unable to Find Specified Location!
Sunday, January 20, 2019
Text Size
இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார். லூக்கா:23:34

ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்

இன்று ஆண்டவருடைய திருப்பாடுகள் குருத்து ஞாயிறு. புனிதவாரத்தில் இறைமகன் இயேசுவின் துன்பங்கள், பாடுகள், மரணத்தை தினிக்கப்போகின்றோம். இறைமகன் இயேசு தனது இறையாட்சிப் பணியில் ஏழையர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார், பாவத்தின் பிடியில் சிறைபட்டோருக்கு விடுதலை அளித்தார், பார்வை இழந்தோருக்கு பார்வைபெறச் செய்தார், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு கொடுத்தார். ஆகையால் மக்கள் அனைவரும் அவரை இஸ்ரயேலின் அரசர் அவர்கள் அனைவருக்கும் விடுதலை அளிக்கப் போகின்றார் என்று நம்பி அவருக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! என்று வாழ்த்திப் புகழ்கின்றார்கள். அரசருக்கெல்லாம் அரசராக நேற்றும் இன்றும் என்றும் வாழ்பவர் யாரும் அமராத கழுதைக் குட்டியின் மேல் அமர்ந்து எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைகின்றார். ஆனால் அந்த புகழ் நிரத்தரமான ஒன்று அல்ல, யூதர்களின் அரசராக புகழ்ந்த மக்கள் அவரைச் சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும், , ஒழிக ஒழிக இவன் சாக வேண்டும் என்று கத்துகின்றார்கள். தனது பணிவாழ்வில் அனைத்திலும் பங்கு பெற்று அவரைப் பின்பற்றிய அன்பு சீடர்களின் ஆணையிட்டு மறுதலிப்பு, முப்பது வெள்ளிக் காசுக்காக காட்டி கொடுத்தது, குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்து அவரைப் பிடித்த போதும், தலைமைக் குருக்களுக்கும், மூப்பர்களுக்கும், மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் பொய்குற்றம் சுமத்திய போதும், இவன் சாக வேண்டியவன் என்று என்று கூறி அவரை முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்திய போதும், அவரைக் கன்னத்தில் அரைந்த போதும், அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்த போதும், அவருக்கு எதிராக குற்றம் சுமத்திய போதும், பரபா என்ன பேர்போன கைதியை தன்னிடம் ஒப்பிட்ட போதும், பிலாத்து மெசியா என்னும் இயேசுவை என்று கேட்ட போது அனைவரும் சிலுவையில் அறையும், இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் என்று கூறிய போதும், ஆளுநனின் படைவீரர்கள் கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அணிவித்து, முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து,ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, யூதரின் அரசரே வாழ்க என்று தலையில் அடித்து, அவரது முகத்தில் துப்பி ஏளனம் செய்த போதும், கள்வர்களின் ஒருவன் பழித்துரைத்த போதும், களப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்க கொடுத்த போதும், தன்னுடைய ஆடையை குழுக்கல் முறையில் பங்கிட்ட போதும், சிலுவையில் மாசுபடாத கைகளையும் கால்களையும் ஆணையால் அறைந்தபோதும், விலாவை ஈட்டியால் குத்திய போதும், அவர் அமைதிகாத்தார். அவர் யாரையும் தீர்ப்பிடவில்லை, தந்தையாம் இறைவன் தன்னிடம் ஒப்படைத்த பணியைச் செய்வதற்காக இறுதிமட்டும் கீழ்படிந்து வெற்றி கொண்ட அரசர்.

இந்த மாபெறும் மறைபொருளைத்தான் இறைவாக்கினர் எசாயா முதல் வாசகத்தில் மிக அழகாக சித்தரித்துள்ளார். இறைவாக்கினர் எரேமியா கூறியது போல் வெட்டுவதற்குக் கொண்டு செல்லும் சாந்தமான செம்மறிப்போல் அவர் எனக்காகவும் உங்களுக்காகவும் அவ்வாறு நடந்து கொண்டார். அனைத்துச் தீச்செயல்களுக்கும் அவர் கிளர்ந்ததெழவில்லை, விலகிச் செல்லவுமில்லை, அடிப்போர்க்கு என் முதுகையும் தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன், நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணைநிற்கின்றார்; நான் அவமானம் அடையேன் என்ற வாக்கு அவருடைய வாழ்வில் நிறைவேறியதை இன்றைய வாசகத்தின் வழியாக உணர்கின்றோம்.

இன்று என்னால் இப்படிப்பட்ட இன்னல்களைத் தாங்க முடியுமா? சிறு அவமானத்தை ஏளனத்தைக் கூட என்னால் தாங்கமுடியாமல் எவ்வளவு கண்ணீர்த் துளிகள், புலம்பல்கள்? உண்மையை எடுத்தரைத்த போதும் நற்செயல்கள் செய்த போது நம்மைபிறர் ஏளனம் செய்து, குற்றம் சுமத்தியால் இறைமகன் இயேசுவைப்போல் அமைதி காத்து, இறைவனின் திருவுளத்தில் பங்குபெறுகின்றோம் என்று மனப்பூர்வமாக கற்றுக் கொள்வோம். நம்முடைய அனுதினம் செபம் தவம் போன்ற தியாகங்கள் நம்மிடையே மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். புனிதவாரத்தில் இறைவனுடைய பாடுகளில் பங்குபெற்று அவருடைய நற்பண்புகளைப் பெறுவோம். என்ன நேர்ந்தாலும் ஆண்டவராகிய என்தலைவர் துணை நிற்கிறார். நான் அவமானம் அடையேன் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் இருக்கட்டும்.

என்னைக் கருப்பையினின்று வெளிக் கொணர்ந்தவர் நீரே; என் தாயிடம் பால்குடிக்கயைிலேயே என்னைப் பாதுகாத்தவரம் நீரே! கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே. திருப்பாடல் 22:9-10

திருச்சபை நிகழ்வுகள்

Christmas (second day)
(Wednesday, 26 December 2018, 25 days earlier)

Epiphany
(Sunday, 06 January 2019, 14 days earlier)

Ash Wednesday
(Wednesday, 06 March 2019, 45 days later)

Lent (first Sunday)
(Sunday, 10 March 2019, 49 days later)

இறையிரக்கத்தின் ஆண்டு